Connect with us

Cinema News

விஜய்யின் ‘தளபதி 68’ படத்தில் இருந்து வெளியேறிய அட்லி?.. புது இயக்குனர் இவரா? போடு புது காம்போ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்தனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த 68-வது படத்தை இயக்குனர் அட்லி இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவின. இந்த படத்திற்காக அட்லிக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டன. ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லி, சமீபத்தில் நடிகர் அஜித்குமாரிடம் ஆக்சன் நிறைந்த ஒரு கதையை சொன்னதாகவும், உலக பைக் சுற்றுப்பயணம் முடிந்ததும் அஜித் நடிக்கும் புதிய படங்களில் ஒன்றாக அந்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் ‘AK63’ படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இச்சூழலில் நடிகர் விஜய்யின் 68-வது படத்தில் இருந்து அட்லி & சன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் வெளியேறி உள்ளனர் என்றும் அட்லிக்கு பதிலாக இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி 68 படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top