ஈஸ்வரிதான் என்னோட எதிரி… அலறும் மனோஜ்.. பாண்டியனை சமாதானம் செய்த மீனா!..
VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் அஸ்தியை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் எழில் மற்றும் செழியன் கொடுக்க அனைவரும் அதை பார்த்து கதறுகின்றனர். தாத்தாவை பார்க்கணும் என இனிய அழுக அவரை எழில் சமாதானம் செய்கிறார். பின்னர் செழியன் தனக்கு தாத்தா தான் குடும்பம் என்றால் என்ன என்பதை கற்றுக் கொடுத்தார்.
எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது என் குடும்பம் தான் என்னுடன் இருந்தனர். இனி தாத்தா சொல்லிக் கொடுத்தது போல குடும்பத்திற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். உன்னையும் பார்த்துக்கிறேன் எழில் என சொல்லி அழுகிறார். பின்னர் எழில் மற்றும் செழியன் அஸ்தியை கரைத்து விடுகின்றனர். கோபி அஸ்தியை கரைக்க தனியாக செல்கிறார்.
இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…
அதை கரைத்து விட்டு ராதிகாவிடம் என்னுடைய அப்பா சொன்னதை கூட என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அம்மா செய்ததுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி என்னுடைய வாழ்வில் ஈஸ்வரி தான் எனக்கு முதல் எதிரி எனக் கூறுகிறார். இனி அந்த வீட்டிற்கு எக்காரணம் கொண்டும் செல்ல மாட்டேன் என கோபி கூறிவிடுகிறார்.
சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ் தனக்கு வந்த லெட்டரை விஜயாவிடம் காட்டி பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ரோகிணி இதெல்லாம் நடக்காது பயப்படாம போய் படுங்க என இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
தன்னுடைய அம்மா மற்றும் மகனுக்காக ரோகிணி தனியாக வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார். மீனா பாட்டிக்கும் தாத்தாவிற்கும் சாப்பாடு எடுத்து செல்ல அங்கு அவர்கள் செருப்பை தைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பதான் வேலை வந்ததே என மீனாவிடம் கூற அங்கே வந்து நிற்கிறார் முத்து.
இதையும் படிங்க: டைவர்சா எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் ராஜி மற்றும் கோமதி பேசிக் கொண்டிருக்க பாண்டியன் அங்கு வந்ததும் ராஜி ஓடிவிடுகிறார். ஏன் அவர்கள் ரெண்டு பேரிடம் பேசாமல் இருக்கீங்க என கோமதி கேட்க தன்னுடைய வருத்தத்தை கூறுகிறார் பாண்டியன். மீனா மளிகை கடைக்கு சென்று பாண்டியனை சமாதானம் செய்துவிட்டு கிளம்புகிறார்.
செந்தில் வந்து வண்டியில் உட்காரு நான் கொண்டு வந்து விடுகிறேன் என கூற வேண்டாம் என அவரை திட்டி விட்டு செல்கிறார். கடைக்கு வரும் செந்திலிடம் பழனி மீனா வந்து பாண்டியனிடம் கூறியதை சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்கும் செந்தில் வருத்தப்படுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.