2 நாள் தூங்காம இரவு பகலா விஜயகாந்த் நடிச்ச படம்!.. இவ்வளவு கஷ்டப்பட்டாரா மனுஷன்!..

Published on: March 30, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: எல்லா நடிகர்களும்தான் நடிக்கிறார்கள். பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். சில நடிகர்கள் காலை 10 மணிக்கு வருவார்கள். அதேபோல், சில நடிகர்கள் மாலை நேரமானாலும் இருந்து முடித்து கொடுத்துவிட்டு போவார்கள். நடிகர் ரஜினி கூட இரவு 2 மணி வரை நடித்துவிட்டு அடுத்தநாள் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு போயிருக்கிறார்.

இந்த தகவலை ரஜினியை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சொல்லி இருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசனோ காலை 7 மணிக்கு படப்பிடிப்பு எனில் 6 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். இந்த விஷயத்தில் அவருடன் யாராலும் போட்டி போட முடியாது.

இதையும் படிங்க: 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..

ஆனால், 2 நாட்கள் அதாவது 2 பகல் மற்றும் 2 இரவு தொடர்ந்து சினிமா உலகில் எந்த நடிகரும் தொடர்ந்து நடித்தது கிடையாது. அதை செய்து காட்டியவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. அவரைப்போல கடுமையாக உழைக்கும் நடிகரை பார்க்கவே முடியாது. பகல் முழுக்க ஒரு படத்தில் நடித்துவிட்டு இரவு முழுக்க வேறு படத்தில் நடிப்பார்.

இதில் என்ன ஆச்சர்யம் எனில் பகல் படப்பிடிப்பு சென்னையிலும் இரவு படப்பிடிப்பு வேறு ஒரு ஊரிலும் நடக்கும். விஜயகாந்த் நடிப்பில் 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் அலெக்சாண்டர். இந்த படத்தில் விஜயகாந்துடன் சங்கீதா, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரித்தவர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.

alexandar

இந்த படம் நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், படப்பிடிப்பு முடியவில்லை. ரிலீசுக்கு இன்னும் 15 நாட்கள்தான் இருக்கிறது. துறைமுகத்தில் படப்பிடிப்பு. ஆனால், தினமும் மழை வர படப்பிடிப்பு நடக்கவில்லை. இதற்கிடையில் வள்ளல் படத்திற்கு நடிக்க போய்விட்டார் சங்கீதா. அவரால் வரமுடியாத நிலை.

இதையும் படிங்க: கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..

இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ். பிரகாஷ் ராஜ், சங்கீதாவிடம் 2 நாட்கள் மட்டும் கால்ஷீட் வாங்கி துறைமுகத்துக்கு போனால் மீண்டும் மழை. உடனே தயாரிப்பாளரிடம் விஜயகாந்த் ஒரு ஐடியா சொன்னார். ஒரு ஸ்டுடியோவில் துறைமுகம் போல சின்னதாக ஒரு செட் போடுங்கள். ஒரு காட்சி மட்டும் எடுத்துவிட்டு மீது காட்சியை வேறு இடத்தில் எடுத்து கொள்ளலாம் என சொன்னார்.

அவர் சொன்னபடியே காட்சி எடுக்கப்பட்டது. தொடர்ந்து 2 பகல் இரண்டு இரவு என நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அந்த 2 நாட்களும் விஜயகாந்த் தூங்கவே இல்லையாம். இந்த தகவலை பஞ்சு அருணாச்சலின் மகன் சுப்பு ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.