Connect with us
viji

Cinema News

கேப்டன் திடீரென அந்த பாடலை பாடுவாருனு எதிர்பார்க்கல! பேஸ் வாய்ஸ்ல பிச்சி உதறிட்டாரு – யாரோட பாட்டு தெரியுமா?

Actor Viijayakanth : தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத ஒரு நடிகர் யாரென்றால் அது நம்ம கேப்டன் விஜயகாந்த்தான். மக்கள் மனதை வென்றவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக கேப்டன் பெரும் பங்கு வகித்தவர். இன்றளவும் விஜயகாந்தின் புகழை ரசிகர்கள் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேப்டன் மட்டும் நல்ல உடல் நிலையுடன் இருந்திருந்தால் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் மாற்றத்தையே கொண்டு வந்திருப்பார். சினிமாவில் விஜயகாந்த் செய்த பல சாதனைகள் இன்று வரை யாராலும் தொடமுடியவில்லை.

இதையும் படிங்க: தனக்காக பாடிய பாடலை வேறொரு நடிகருக்கு விட்டுக் கொடுத்த விஜய்! ஒன்னு இல்ல மூணு – இது பெரிய ரெக்கார்டுபா

80களில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராக வலம் வந்த விஜயகாந்தை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட தொடங்கினார்கள். கமல், ரஜினி ரசிகர்களை விட விஜயகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்.

விஜயின் வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் கேப்டனும் காரணமாக இருந்திருக்கிறார். அதே போல் சூர்யாவுக்காக ஒரு படத்தில் கேமியோ ரோலிலும் வந்து அசத்தியிருப்பார். இப்படி பல நடிகர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்திருக்கிறார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்

இந்த நிலையில் விஜயகாந்தின் இசை ஆர்வத்தை இசையமைப்பாளர் பரணி ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் பாடல்களை எழுதி வந்த பரணி பெரியண்ணா படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அந்தப் படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக விஜயின் குரலில் அமைந்த தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. சூர்யாவின் கெரியரில் மிக முக்கிய பாடலாகவும் விளங்கியது.

இதையும் படிங்க: ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?

இந்தப் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நிலையில் விஜயகாந்தை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றாராம் பரணி. பரணியை பார்த்ததும் விஜயகாந்த் அவருடைய பேஸ் குரலில் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து பாடலை 5 வரிகள் வரைக்கும் பாடி சூப்பரா இருக்குயா இந்த பாட்டு என்று கூறினாராம்.

இதை கேட்டதும் பரணிக்கு ஒரே ஆச்சரியமாம். அவருடைய பேஸ் குரலில் இந்தப் பாடலை கேட்டதும் எப்படியாவது விஜயகாந்தை குரலில் ஒரு பாடலை ரெக்கார்டு செய்துவிட வேண்டும் என நினைத்தாராம் பரணி. ஆனால் முடியவில்லை என்று கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top