பேரும் புகழும் சும்மா வந்துருமா என்ன? விஜயின் ஆஸ்தான குரு யார் தெரியுமா? அட இவரா?
Actor Vijay: தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டாருக்கு இணையான ஒரு புகழை பெற்று மக்கள் மத்தியில் நிலையான அந்தஸ்தை அடைந்திருப்பவர் நடிகர் விஜய். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு பிறகு அரசியலில் தீவிரமாக விஜய் இறங்க இருக்கிறார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை நேரடியாக எதிர் கொள்ள இருக்கிறார் விஜய். அதற்காக இப்போதிலிருந்து தன்னுடைய பணிகளை துவங்கியிருக்கிறார். தன்னுடைய இயக்க அன்பர்களை வைத்து சமூகத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: கேப்டன் மேட்டர் கேட்கவே மெர்சலா இருக்கே!.. ஜோடி போட்டது நடிச்சது இவ்வளவு பேரா!.. அடேங்கப்பா!..
இந்த நிலையில் விஜய்யின் இந்த வளர்ச்சி ஒரு மாபெரும் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அவருடைய ஆரம்ப கால படங்களை எடுத்துப் பார்த்தால் அவருடைய கடின உழைப்பும் முயற்சியும் நமக்கு கண்கூடாக தெரியும். இப்பேற்பட்ட விஜயின் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய மகன் சினிமாவிற்கு வரக்கூடாது என நினைத்தவர் சந்திரசேகர்.
ஆனால் விஜயின் ஆசையின் பேரில் இந்த சினிமா உலகத்திற்கு வந்தார். அதுவும் ரஜினியின் அண்ணாமலை பட வசனத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதை தன் தந்தையின் முன் பேசி அதன் மூலம் இந்த சினிமாவிற்கு வந்தவர் விஜய். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க தெறிக்க எதிரிகளை வேட்டையாடும் விஷால்.. எல்லாம் யாருக்காக தெரியுமா?.. ரத்னம் விமர்சனம்!
தொடர்ந்து பல படங்களில் தன் தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்தார். அதன் பிறகு மற்ற இயக்குனர்களுடனும் தன் மகன் பணிபுரிய வேண்டும் என நினைத்த எஸ் ஏ சந்திரசேகர் விஜய்க்காக பல இயக்குனர்களிடம் வாய்ப்புக்காக ஏறி இறங்கினார். அவருடைய கெரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுவது செந்தூரப்பாண்டி.
அந்த படத்தில் விஜய்க்காக விஜயகாந்த் நடிக்க வைத்து அதன் மூலம் விஜயை ஒரு ஹீரோ மெட்டீரியல் ஆகியவர் சந்திரசேகர். இப்படி விஜயின் எல்லா வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். ஒரு சமயம் விஜயிடம் உங்களுடைய ஆஸ்தான குரு யார் எனக் கேட்டபோது தயங்காமல் தன் தந்தையின் பெயரை சொன்னார் விஜய். ஆனால் இப்பொழுது அதே மாதிரி தன்னுடைய குரு என் அப்பா தான் என்று சொல்வாரா என்பது சந்தேகம்தான் என சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: அஜித் இல்லனா மார்க் ஆண்டனி படமே இல்ல!.. சீக்ரெட்டை உடைத்த விஷால்!.. அட சொல்லவே இல்ல!..