விஸ்வாசம் படத்துல டைம் டிராவல் காட்சி இருக்கு தெரியுமா?... ஆனா சிவா சார் இது ஓவரா இல்ல!

Viswasam: அஜித், நயன் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படம் ஒரு டைம் டிராவல் படம் என்ற ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த சில ரசிகர்கள் சிறுத்தை சிவா மாதிரி ஒரு டைரக்டர் கிடைக்கவே கொடுத்து வச்சிருக்கணுமப்பா எனவும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித், நயன் தாரா, அனிகா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், கோவை சரளா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். படமும் வெளியாகி நல்ல ரீச்சை கொடுத்து சூப்பர் ஹிட் படமானது.
இதையும் படிங்க: உருட்டு பலமா இருக்கே மனோஜு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடி விழும்.. சிறகடிக்க ஆசையில் செம ட்விஸ்ட்டு!
இந்த படம் யோகி பாபுவின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் அஜித் மற்றும் அனிகாவின் காட்சிக்கு நிறைய அப்ளாஸ் கிடைத்தது. அதிக காட்சிகள் இருவருக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது.
தற்போது இப்படத்தின் ஒரு காட்சியை வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது படத்தின் தொடக்கத்தில் ஒரு திருவிழா காட்சி வரும். அதில் அஜித் தனியாக இருப்பார். அதன் பின்னரே தன் குடும்பத்தை தேடி கிளம்புவார். அவர்களுடம் சேர்ந்து அனிகாவுக்கு உதவியாக இருந்த அஜித் தன் குடும்பத்துடன் அவரை பேச வைப்பார்.
இதையும் படிங்க: அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..
அதன் பின்னரே அஜித்துக்கு விபத்து நடக்கும். அப்படி அனிகா அஜித் குடும்பத்துடன் பேசும் காட்சியில் இருந்த நடிகர்கள் எல்லாம் தொடக்க காட்சியில் இருந்த அதே காஸ்ட்யூமில் தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஆரம்பத்தில் அதே திருவிழாவில் தான் இருப்பார்கள். அப்போ அஜித் மட்டும் என்ன டைம் டிராவலா பண்ணி வந்து இருப்பாரு? சிவா தயாரிப்பாளருக்கு சேவ் பண்ணி கொடுத்து இருக்காருப்பா.
வாடகையை குறைச்சிருக்காரு மனிஷன் என ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் சின்ன மிஸ்டேக் தான். ஆனால் இப்படி பச்சையா தெரியுற மாதிரியா சார் வைப்பீங்க என கலாய்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னங்க கோபி மறுபடியும் பழைய பொண்டாட்டிய பார்த்து ஃபீல் பண்ணுறீங்க!.. தர்ம அடி விழப்போது!..