More
Categories: Cinema News latest news

கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்!.. என்ன திடீர்னு விஷால் இப்படி சொல்லிட்டாரு!

லக்‌ஷ்மி மேனன், வரலக்‌ஷ்மி சரத்குமார் என நடிகர் விஷாலுடன் சில நடிகைகளின் பெயர்கள் காதல் கிசுகிசுவில் அடிபட்டது. விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் காதலித்து வந்த நிலையில், பிரேக்கப் செய்து பிரிந்தனர் என கூறப்பட்ட நிலையில், வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்தது தனக்கு சந்தோஷமாக இருந்தது என விஷால் பேசியுள்ளார்.

செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து புரட்சித் தளபதியானார். சமீப காலமாக விஷால் நடித்த படங்கள் ஓடாமல் தொடர்ந்து சொதப்பியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: விரட்டி விரட்டி வெட்டும் விஷால்!.. ரத்தினம் டிரெய்லரை பார்த்தீங்களா?.. ஹரி இன்னும் திருந்தல போல!..

ஆனால், அதற்கும் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து 100 கோடி ரூபாய் வசூலையும் சாதித்து காட்டி விட்டார் விஷால். அடுத்ததாக இந்த மாத இறுதியில் ரத்னம் படம் சுந்தர். சியின் அரண்மனை படத்துக்கு போட்டியாக வெளியாகிறது.

நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் இருந்து வந்த விஷால் குறித்து ஸ்ரீரெட்டி சொன்ன அனகோண்டா மேட்டர் எல்லாம் செல்ஃப் ட்ரோலாக மார்க் ஆண்டனி படத்திலேயே இடம்பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்தது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் படத்தில் நடிக்க இருந்த எஸ்.ஜே.சூர்யா… கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட்…

2019ம் ஆண்டு எல்லாத்துக்கும் ஒரு எண்ட் கார்டு போட்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்த விஷால் அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தமே செய்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமல் அந்த திருமணம் தடைப்பட்டு நின்று போனது. அதன் பின்னர் இன்னமும் விஷாலுக்கு திருமணம் செய்துக் கொள்ள சரியான பெண் அமையவில்லை.

சமீபத்திய பேட்டியில் விஷாலிடம் இந்த கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில், ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு அவள் வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பல. ஒரு பெண்ணுக்கு சரியான கணவராக தினமும் காலையில் அலுவலகம் போய் விட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து அவளுடன் டைம் ஸ்பெண்ட் பண்ண என்னால் முடியாது. அந்த கண்டிஷனுக்கு எல்லாம் சரியாக செட் ஆகும் ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

Published by
Saranya M

Recent Posts