அஜித்தின் ‘v’ செண்டிமெண்டுக்கு இவர்தான் காரணமா? விடாமுயற்சி மட்டும் ஏன் டேக் ஆஃப் ஆகல? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

Published on: August 5, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் கலைஞனாக வளர்ந்து நிற்கிறார். தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கும் நடிகர்களில் அஜித் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறார். எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் போவதில்லை. யாரையும் கண்டு பேசுவதுமில்லை. மீடியாக்களை சந்திப்பதுமில்லை. இருந்தாலும் பல கோடி ரசிகர்களை கொண்டு ஒரு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.

இப்படி இருந்தும் இன்னும் ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தின் படங்கள் என்றாலே கண்டிப்பாக அது வியில் தான் இருக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. சமீபகாலமாக அவருடைய பெரும்பாலான படங்களின் தலைப்புகள் எல்லாமே v என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் விதமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க : விஜயகாந்துக்கு ஜோடின்னா தலைதெறிக்க ஓடிய நடிகைகள்!.. ராதிகா செய்த மேஜிக்..

அப்படி உள்ள தலைப்புகள் கொண்ட படங்களும் அஜித்திற்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன. மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. அப்படி என்ன இருக்கிறது v யில்? என்று பார்த்தால் அதற்கான காரணத்தை சொல்கிறார் அஜித்தின் படங்களுக்கு பேர் வைக்கும் ஒரு ஜோசியர்.

ajith3
ambani raja

அவர் பெயர் டாக்டர்.அம்பானி ராஜா. அவர்தான் அஜித்தின் படங்களுக்கு பேர் வைக்கிறாராம். ஆரம்பம், வேதாளம், என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு இவர்தான் பேர் வைத்தாராம். அதில் அஜித்தை பொறுத்தவரைக்கும் தயாரிப்பாளருக்கு பிடித்தால் மட்டுமே அந்த பேரை ஓகே சொல்லுவாராம். ஏனெனில் அவர்தான் படத்திற்கு பணம் போடுகிறவர். அதனால் தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு விட்டுவிடுவாராம்.

இந்த மூன்று படங்களுமே அஜித், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய மூவரின் விருப்பத்தில் தான் பேர் வைக்கப்பட்டதாம். மேலும் ஏன் v வொர்க் ஆனது என்பதையும் சொல்லியிருக்கிறார். பொதுவாக v என்ற எழுத்து ரிஷப ராசியில் வருமாம். அஜித்தின் ஜென்ம ராசி கடக ராசியாம். அதனால் கடக ராசிக்கு லாபகரமான ராசி ரிஷப ராசியாம். இதனாலேயே அந்த v எழுத்து வொர்க் அவுட் ஆனதாம்.

இதையும் படிங்க : இப்பதான்டா ஒரு ஹிட்டு கொடுத்தேன்!.. சந்தானத்துக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பெண்டிங் படங்கள்!.

ஆனால் விடாமுயற்சி தள்ளிப் போவதற்கு அவருக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்படுகிறது என்றும் கெட்டப் எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் உடல் அளவில் அவரை தயார் படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விடாமுயற்சி படம் தாமதமாகிறது என்று கூறியிருக்கிறார்.