ரத்னம் பட புரோமோஷனில் இல்லாமல் போன பிரியா பவானி ஷங்கர்… ஏன்? கசிந்த உண்மை..
Rathnam: இயக்குனர் ஹரி மற்றும் விஷால் இருவரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதற்கான புரோமோஷனில் பிரியா பவானி ஷங்கர் கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அக்மார்க் கிராமத்து பாணியில் கதை உருவாக்குவதில் கெட்டிக்காரர் இயக்குனர் ஹரி. இவரின் இயக்கத்தில் கடைசியான வெளியான யானை திரைப்படத்துக்கு பின்னர் ரிலீஸாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். இப்படத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: இப்படி தலைப்பு வச்சா படம் ஓடாது!.. விஜய்க்கு இப்படி ஒரு ராசி இருக்கு!.. பொங்கும் பிரபலம்…
இப்படத்தின் ரிலீஸுக்கான புரோமோஷனில் எல்லா இடங்களிலும் விஷால் தான் கலந்து கொண்டார். இயக்குனர் ஹரி சில பேட்டிகளை மட்டுமே கொடுத்தார். ஆனால் இப்படத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்த பிரியா பவானி ஷங்கர் ரத்னம் திரைப்படத்துக்காக வெளியில் தலை காட்டவே இல்லை.
இதுகுறித்து விசாரித்தபோது, பொது மேடைகளில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். மற்ற படங்களுக்கு கால்ஷூட் கொடுத்திருப்பதால் அவரால் ரத்னம் புரோமோஷனுக்கு வரமுடியவில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் அது உண்மையில்லையாம்.
இதையும் படிங்க: விஜய் ஸ்டைலில் வெளியான கவினின் ஸ்டார் ட்ரைலர்… அடுத்த ஹிட் கன்பார்ம் தான் போல…
சீரியலில் இருந்து கோலிவுட்டுக்குள் நுழைந்தவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நடிகையானார். வாய்ப்புகள் வந்தாலும் அவர் நடிப்பில் இதுவரை எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்படங்களில் அம்மணி புரோமோஷனுக்கு தவறியதே இல்லையாம். இங்கேயும் அந்த ராசி வந்துடுமோ என்ற பயத்தில் தான் ரத்னம் படத்தின் புரோமோஷனுக்கு அவரை படக்குழுவே அழைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.