Connect with us

Cinema History

எழுத்தாளர் சுஜாதாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகளவில் உள்ளது. அறிவியல், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதுவதில் ஆற்றல் மிகுந்தவர். இவருக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. இவர் ஒரு என்ஜினீயர்.

1935, மே 3ல் பிறந்தார். ஸ்ரீரங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்தார். துப்பறியும் கதைகளை எழுதுவதில் வல்லவர்.

writer sujatha

இதுவரை 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்ப்படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

காயத்ரி

இந்தப்படமானது எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் தழுவல். 1977ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன். இளையராஜா இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

சினிமாவிற்காக நாவலில் இருந்து சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு படம் வெளியானது. இதுவே இந்தப்படம் தோல்வி அடைய முக்கிய காரணமாகவும் ஆகிவிட்டது. ஆட்டம் கொண்டாட்டம், காலை பனியில் ஆடும், உன்னை தான், வாழ்வே மாயமா ஆகிய பாடல்கள் உள்ளன.

ப்ரியா

இந்தப்படமும் எழுத்தாளர் சுஜாதாவின் ப்ரியா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். 1978ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி, அம்பரீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானியின் கைவண்ணத்தில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. ஏ பாடல் ஒன்று, அக்கரைச் சீமை அழகினிலே, டார்லிங், டார்லிங், என் உயிர் நீதானே, ஸ்ரீராமனின் ஸ்ரீதேவி ஆகிய பாடல்கள் உள்ளன.

விக்ரம்

1986ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ராஜசேகர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்;ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கமலுடன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

kamal in vikram

இந்தப்படமானது எழுத்தாளர் சுஜாதா எழுதிய அறிவியல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தக் கதை குமுதம் வார இதழில் அப்போது தொடர்கதையாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட், கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பற்றி அதிகம் அறியப்படாத காலகட்டங்களில் எழுத்தாளர் சுஜாதா இவற்றைப் பற்றி தனது கதையில் திறம்பட புகுத்தி விளையாடியிருப்பார்.

இந்தக்கதை எல்லாம் இப்போதைய காலகட்டத்துக்கு ஒத்து வருமா என்ற சந்தேகம் பலருக்கும் வந்த வேளையில் துணிச்சலாக கமல் படமாக எடுத்தார். இப்போது உள்ள காலகட்டத்திலும் அந்தப்படத்தில் உள்ள டெக்னாலஜியைப் புகழ்ந்து பேசுகின்றனர்.

அந்தக்காலத்திலேயே இந்தப்படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்து எடுக்கப்பட்டதாம். இசைஞானி இந்தப்படத்திற்கு புதிய முறையில் அதாவது கம்ப்யூட்டரில் இசை அமைத்துள்ளார். விக்ரம், விக்ரம், வனிதாமணி, சிப்பிக்குள் ஒரு முத்து, ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி, மீண்டும் மீண்டும் வா ஆகிய பாடல்கள் உள்ளன.

இந்தப்படத்தின் 2ம் பாகமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல் சொந்தமாகத் தயாரித்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. 420 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்துவிட்டது.

வானம் வசப்படும்

2004ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ்சினிமாவின் திறமையான ஒளிப்பதிவாளர்;களில் ஒருவர். இந்தப்படம் எழுத்தாளர் சுஜாதாவின் இருள் வரும் நேரம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக்குமார், ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், விஜயகுமார், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் மகாதேவன் இசை அமைத்துள்ளார். கண்கள் தீண்டி, வானம் வசப்படுமே, மேகமே, செய்தி சுட சுட, கண்ணே கண்ணே, வானம் உயரம் ஆகிய பாடல்கள் உள்ளன.

ஆனந்த தாண்டவம்

Aananda thandavam

2009ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.காந்தி கருஷ்ணா. தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்தன. சித்தார்த் வேணுகோபால், தமன்னா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். பட்டு பூச்சி, கல்லில் ஆடும், பூவினை, மேகம் போல, கண்ணா கண்கிறேன், ஆனந்த தாண்டவம் ஆகிய பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top