பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தனலட்சுமி தற்போது பரபரப்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய அம்மா அவரை எதிர்த்து சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது . முதன்முறையாக ஆறாவது சீசனில் மக்கள் போட்டியாளர் பங்கேற்கப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விடுதலை படத்தோட மிரட்டலா இருக்கு!.. சூரியின் கருடன் படத்துக்கு பிரஸ் ஷோவில் கிடைத்த விமர்சனம்!..
தனலட்சுமி மற்றும் ஷிவின் கணேசன் எனும் திருநங்கை போட்டியாளர் இருவரும் மக்கள் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவருமே திறமையான விளையாட்டை வெளிப்படுத்தினர்.
டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி டிக் டாக் சரி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். விதவிதமாக கெட்டப்புகளை போட்டு நடித்து வந்தார். அதன் பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அனைவருடனும் சண்டை போட்டு வந்த தனலட்சுமி இறுதிவரை ஆட்டத்தில் நிலைக்காமல் எவக்ட் ஆகி வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்த நிலையில், கடைசியில் வெளியேறிய பின்னர் அஸிமுக்கு ஆதரவாக மாறிவிட்டார் தனலட்சுமி.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், என் அம்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று என் அம்மா சட்டப்பூர்வ கடிதம் கொடுத்துள்ளார் என பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும்,
அவரது அம்மாவின் புகைப்படத்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது, அம்மாவின் பெயரைச் சொல்லக்கூடாது, வரக்கூடாது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார் என பிக் பாஸ் தனலட்சுமி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். இருவருக்கும் என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித்திடம் சரண்டர் ஆவதை தவிர வேற வழியில்ல!.. கை மாறும் ஏகே 64.. அப்போ ஹிந்தி கனவு?!..