Cinema News
முடிஞ்சா என்னைத்தாண்டி போங்க! சவுக்குக்கட்டைய கையில் எடுத்த விஜயகாந்த் – அமைதியான மாணவர்கள்
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். எப்படி எம்ஜிஆரை இன்றளவும் பேசி கொண்டிருக்கிறோமோ அதே போல விஜயகாந்தின் புகழையும் நாம் காலங்காலமாக பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம்.
இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். அதாவது அரசியலுக்கு வந்த பிறகு விஜயகாந்த் அதிகமாக திமுக- வைக் குறித்தே தன்னுடைய எதிர்ப்பை காட்டி வந்தார். கலைஞர் பேசுவது மாதிரி ஒரு சில வீடியோக்களில் கிண்டல் பண்ணி பேசுவதையும் நாம் பார்க்க முடிந்தது.
இதையும் படிங்க: துண்டக் காணோம் துணியக் காணோம்னு திரியும் துஷாரா விஜயன்.. மார்கழி குளிருக்கு இதமான மசால் வடை!..
ஆனால் உண்மையிலேயே திமுக வெறியனாக ரசிகனாகத்தான் விஜயகாந்த் இருந்திருக்கிறார். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த காலத்தில் விஜயகாந்துடன் இணைந்து மொத்தம் 5 பேர் கொண்ட குழுவாகத்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
ராதாரவி, மண்வாசனை பாண்டியன், எஸ்.எஸ். சந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு என எந்த போராட்டமானாலும் எந்த பிரச்சினையானாலும் இவர்கள்தான் முதல் ஆளாக வந்து நிற்பார்கள். விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவர்களும் கூட.
இதையும் படிங்க: ஓடிடியில் முட்டிக்கொள்ளும் சதீஷ் vs நானி.. ஹாய் நன்னாவா? கான்ஜுரிங் கண்ணப்பன்? உங்க சாய்ஸ் என்ன?
தஞ்சாவூரில் உள்ள பூண்டி கலைக்கல்லூரியில் ஒரு விழாவுக்கு கேப்டனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம். அவரோடு இந்த ஐந்து பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரம் அதிமுக ஆட்சி நேரம். மேடையில் வந்து பேசிய சந்திரசேகர் திமுகவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
உடனே பொங்கி எழுந்த மாணவர்கள் மேடையில் இருந்தவர்களை அடிக்க ஓடி வந்தார்களாம். இதை பார்த்துக் கொண்டிருந்த ராதாரவி, எஸ்.எஸ், சந்திரனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க வேட்டியை மடித்துக் கொண்டு கீழே இறங்கினாராம் விஜயகாந்த்.
இதையும் படிங்க: ஒரு செல்ஃபியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – நிவாரணம் கொடுக்க வந்த விஜய்க்கு எதிராக திரும்பிய சம்பவம்
ஒரு படத்தில் வரும் காட்சியை போல் மாணவர்களை அமைதியாக இருக்கும் படி கூறியிருக்கிறார். ஆனாலும் மாணவர்கள் அடங்கவில்லையாம். உடனே அருகில் இருந்த ஒரு சவுக்குக் கட்டையை கையில் எடுத்து என்னைத்தாண்டி போய் அடிங்க. ஒரு ஆள் அப்படி தாண்டி போனாலும் கூட அவர்களுக்கு இந்த சவுக்குக் கட்டையால் அடி விழும் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் மாணவர்கள் அமைதியானர்களாம்.