Connect with us
radhika

Cinema News

பாரதிராஜாவின் R செண்டிமெண்ட்! இவருடைய அறிமுகம் இல்லாமல் அந்த வரிசையில் வந்த ஒரே நடிகை

Director Bharathiraja: தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக வலம் வருபவர் பாரதிராஜா. பாரதிராஜாவை பொறுத்தவரைக்கும் ஹீரோக்களை விட ஹீரோயின்களை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் வித்தியாசமானவர். அவருக்கு பிடிக்கின்ற ஹீரோயின்கள் பெரும்பாலும் படக்குழுவில் உள்ளவர்களுக்கு பிடிக்காது.

அப்படித்தான் அனேக ஹீரோயின்களை அறிமுகம் செய்து இப்பொழுது அந்த ஹீரோயின்கள் எல்லாரும் வெற்றி கதா நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ராதிகாவை சொல்லலாம். பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் ராதிகா. ஆனால் முதலில் ராதிகா கருப்பு நிறத்தில் கொழுக் மொழுக் என்றுதான் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கே கூப்பிடல!. ஆனா விஜயகாந்த் செய்த உதவி!.. நெகிழும் ஆர்.வி.உதயகுமார்…

இவரை பார்த்த பல பேர் இவரா ஹீரோயின் என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். ஆனால் பாரதிராஜா எதையும் காதில் வாங்காமல் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதன் விளைவு இப்போது சினிமாவில் நடிப்பிற்கு இளவரசி ராதிகா என்றுதான் பல பேர் கூறிவருகிறார்கள்.

பாரதிராஜா என சொல்லும் போது இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளின் பெயர்கள் பெரும்பாலும் R வரிசையில்தான் அமைந்திருக்கும். அது பாரதிராஜாவின் செண்டிமெண்ட். தன்னால் அறிமுகம் ஆகும் நடிகைகளின் பெயர்களை R வரிசையில் மாற்றித்தான் அறிமுகம் செய்வார் பாரதிராஜா.

இதையும் படிங்க: எவன் பிரச்னை பண்ணாலும் முத்துக்கிட்டையே தான் பிரச்னை வருது… டைரக்டர் சாரே உங்களுக்கே போர் அடிக்கலையா…

அந்த வகையில் ராதிகா, ராதா, ராஜஸ்ரீ, ரஞ்சிதா போன்ற பல நடிகைகள் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகள். ஆனால் பாரதிராஜா அறிமுகம் செய்யவில்லையென்றாலும் அந்த R வரிசையில் பெயர் வைக்கப்பட்ட ஒரே ஒரு நடிகையை பற்றித்தான் பார்க்க போகிறோம். அவர் வேறு யாருமில்லை. நடிகை ரோஜா.

ரோஜாவின் உண்மையான பெயர் ஸ்ரீலதா. அவர் முதன் முதலில் சிவபிரசாத்தால் தெலுங்கில்தான் அறிமுகம் செய்யப்பட்டார். சிவபிரசாத்தும் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்களாம். அதனால் ரோஜாவுக்கு பாரதிராஜாதான் பெயர் வைக்க வேண்டும் என சிவபிரசாத் விரும்பியிருக்கிறார். அதன் பிறகுதான் ஸ்ரீலதா என்ற பெயரை ரோஜா என மாற்றினாராம் பாரதிராஜா.

இதையும் படிங்க: நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த ரோஜா விஜயகாந்த் , பாரதிராஜா கூட்டணியில் உருவான முதல் படமான தமிழ் செல்வன் படத்தில் ரோஜாவை கதா நாயகியாக போட்டார் பாரதிராஜா. இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top