Cinema News
படத்துக்காக உடம்புல அந்த பார்ட்டையே டேமேஜ் பண்ண சூரி!.. விருது வாங்கணும்னா சும்மா இல்ல பாஸ்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி திரைப்படம் பங்கேற்று வருகிறது.
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த பரோட்டா சூரி இன்று நடிப்பின் நாயகனாக முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். காமெடி நடிகராக நடிக்கும் போது பெரிதாக எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் நடித்து வந்த சூரி தற்போது கொட்டுக்காளி திரைப்படத்திற்காக தனது தொண்டையை டேமேஜ் செய்து நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தலைவரே போன் ஒயர் பிஞ்சு 2 வாரம் ஆகுது!.. உலகத்துலயே ஹீரோவே இல்லாம நடந்த சக்சஸ் மீட்.. அதான் விஷயமா?
சர்வதேச விழாக்களில் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் பலரும் குறிப்பாக படம் முழுக்க அந்தக் குரலை எப்படி மெயின்டைன் பண்ணிங்க என்கிற கேள்வியை தான் கேட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இயக்குனர் தன்னிடம் குரலை சற்று மாற்றி பேசும்படி சொல்லும் போது, நான் கொஞ்சம் தொண்டை கட்டிக் கொண்டது போல பேசி காட்டினேன். அவரும் இது ஓகே என சொல்லிவிட்டார்.
ஆனால், படம் முழுக்க இதை எப்படி ஒரே விதமாக மெயின்டைன் பண்ண போகிறோம் என யோசித்தேன். மேலும், நான் செய்தது செயற்கைத்தனமாக எனக்கே தெரிந்தது.
இதையும் படிங்க: 2 மணி நேர பேட்டிக்கு 13 லட்சம் வாங்கிய ’ஆண்ட்டி’ நடிகை… துட்டுக்காக இப்படியா இறங்குவீங்க..
உடனடியாக ஒரு மருத்துவரை போய் சந்தித்தேன் தொண்டை கட்டிக் கொண்டது போல பேச வேண்டும் பெரிய பாதிப்பு இல்லாமல் த்ரோட் டேமேஜ் செய்ய முடியுமா எனக் கேட்டேன். அவர் சிரித்து விட்டார். எல்லோரும் சரியாகாத தொண்டையை சரி செய்யத்தான் என்னிடம் வருவார்கள். ஆனால் நீங்க இப்படி செய்ய சொல்கிறீர்களே ஏன் என்று கேட்டார். புதிய படத்துக்காக படம் முழுவதும் அப்படி இருக்க வேண்டும் என்றேன்.
அவர் உடனே இயற்கையான முறையிலே தொண்டையைக் கவ்வுவதற்கான நாவப் பழம் இன்னும் சில ஐட்டங்களை அரைத்து மென்று திண்ணவும் சாறு போல குடிக்கவும் கூறினார். அதை பயன்படுத்தி தான் அப்படி நடித்தேன் என சினிமாவுக்காக தனது தொண்டையை எப்படி கெடுத்துக் கொண்டு நடித்தேன் என புதிய பேட்டி ஒன்றில் சூரி கூறி மெய் சிலிர்க்க வைக்கிறார்.