Cinema History
சத்தியராஜ் நடித்து வெளிவராத திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட இவ்வளவு படமா?!…
என்னம்மா கண்ணு அப்படின்னு ஒரு பேச்சுக்கு யாராவது சொன்னா கூட நம்ம எல்லாரோட நியாபகத்துல வருவது ‘புரட்சி தமிழன்’ என்ற அடைமொழி கொண்ட சத்யராஜ்தான். வில்லனா நடிக்க வந்தவரு நடிப்புல அசத்துர திறைமைய தனக்குள்ள வைச்சிருந்ததனால ரொம்ப பிரபலமானாரு. கொங்கு மண்ணிலிருந்து கோடம்பாக்கம் வந்த இவர் இப்போ குனச்சித்திர வேடங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.
வில்லனா நடிச்சி வந்த இவரு மெதுவா அப்படியே ஹீரோவா தலைகாட்ட தொடங்கிய இவருக்கு வெற்றி மேல வெற்றி வரத்துவங்க ஆரம்பிச்சுது. தன்னோட நக்கல், நையாண்டியான வசனங்களாலயும், நவரச நடிப்புனாலயும் இன்னைக்கு எங்கயோ போயிட்டாரு சத்யராஜ். அவரு பையன் சிபிராஜ் நடிக்க வந்ததுக்கு அப்புறமா கூட இவர் கதாநாயகனா நடிச்சிக்கிட்டு தான்இருந்தாரு, சொல்லப்போனா சிபிராஜ் படத்தை விட இவர் படம்தான் அதிகமா தியேட்டர்கள்ல ஓடுச்சு.
இதையும் படிங்க: அஜித்துக்கு இந்த விஷயத்துல கோபம் அதிகமா வரும்! மாட்டிக்கிட்டு முழித்த டெக்னீசியன்கள்
அதிலேயும் கவுண்டமணியும் இவரும் சேர்ந்து நடிச்சிட்டா கேக்கவே வேண்டாம்.. படம் முழுக்க ஒரே கும்மாளம்தான், இவங்க ரெண்டு பேரும் படத்துல அடிச்ச லூட்டி இருக்கே அப்பப்பா.. அத பார்க்கவே ரசிகர்கள் திரும்ப திரும்ப போனாங்க. எண்ணுறதுக்கு கொஞ்சம் சிரமப்படுற அளவுக்கு இவங்களோட வெற்றி படங்கள் இருந்து வருது.
அதே மாதிரிதான் மணிவண்ணன், சத்தியராஜ் சேர்ந்து நடிச்ச படங்களும் சும்மா தெறிக்க விட்டுச்சு. அதோட இவரு, கவுண்டமணி, சத்யராஜ் மூணுபேரும் ஒன்னா நடிச்சா கேக்கவே வேண்டாம், சும்மா பத்தாயிரம் வாலா பட்டாசை கொளுத்தி விட்ட மாதிரி ஜோராயிருக்கும். இவங்க படத்துல ஒருத்தர, ஒருத்தர் கிண்டல் பண்ற மாதிரியான காட்சிகள்லாம் இன்னைக்கும் ரசிகர்களால மறக்க முடியாத அளவுக்கு இருக்குது.
இதையும் படிங்க: கோபிக்கே ஷாக் கொடுக்கிறீங்களே பாக்கியா.. செழியன் பிரச்னை ஓவருங்க…
இப்படிப்பட்ட சத்யராஜ் நடிச்சு சில காரணங்களால பூஜை போட்டும், பாதியிலேயே கைவிடப்பட்ட படங்களும் கணிசமான எண்ணிக்கையில இருக்கு. இதுல முதல் இடத்துல இருக்குறது “மிஸ்டர் நாரதர்”. அப்புறம் “காளிங்கராயன்”, ஆர்,எம்.சுரேஷ் குமார் இயக்கத்துல ஆரம்பிக்கப்பட்ட “வெற்றிவேல்” ங்கிற படமும் ஆரம்பிச்சு கொஞ்ச நாளிலேயே கைவிடப்பட்டது.
‘ரீல் நம்பர் ஒன்’ பேரக்கேட்டதுமே ஆஹா சத்யராஜ் நடிப்புக்கு ஏத்த டைட்டில் தான்னு யோசிச்சதுக்குள்ள ஒரே ஒரு போஸ்டர் வெளிவந்ததோட மட்டும் அப்படியே நின்னுபோச்சி. ராஜ்கபூர் இயக்கத்துல இளையராஜா இசையமைப்பாதாக ஒப்பந்த்தமெல்லாம் போட்டாங்க, ஆனா அதுவும் வெளிவராம புஷ்ன்னு போயிடுச்சி. அந்த படதோட பேரு “சிவலிங்கம்”. “திருநாள்”,” ராஜா ராணி” அப்டின்னு டைட்டில் கொடுத்து அப்பறமா எதுவும் சொல்லாமலேயே அப்படியே நிப்பாட்டீடாய்ங்க.