Cinema News
சிவகார்த்திகேயனா? சூர்யாவா?!.. விஜயின் இடத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் நடிகர்கள்!..
தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவில் அறிமுகமாகி படங்களில் நடிக்க துவங்கியவர். ‘நன்றாக நடனம் ஆடுகிறார்’ என்றே முதலில் கவனிக்கப்பட்டார். பூவே உனக்காக படத்தை பார்த்தவர்கள் ‘அட நன்றாகவும் நடிக்கிறாரே’ என ஆச்சர்யப்பட்டனர்.
அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக மாறினார். விஜயின் படங்கள் வசூலை வாரி குவித்தது. ரஜினிக்கு பின் தியேட்டரில் ரசிகர்கள் அதிகம் கூடும் நடிகராக விஜய் மாறினார்.
இதையும் படிங்க: 28 முறை ரஜினியுடன் மோதிய சத்யராஜ் படங்கள்!. ஜெயிச்சது யாருன்னு வாங்க பார்ப்போம்!..
இவருக்கு இளைய தளபதி என்கிற பட்டமும் கிடைத்தது. ஒருகட்டத்தில் தளபதி என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ரஜினி படங்களுக்கு நிகராக விஜயின் படங்களும் வசூலை அள்ளியது. தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் எனவும் அறிவித்திருக்கிறார். இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின் அவர் படம் நடிப்பாரா என்பதே தெரியவில்லை.
இந்நிலையில், விஜயின் இடத்தை அடுத்து பிடிக்கப்போகும் நடிகர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பலரும் சொல்வது சிவகார்த்திகேயனின் பெயரைத்தான். ஏனெனில் குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக அவரும் இருக்கிறார். நடனம், காமெடி என ரசிகர்களை கவர்கிறார். அதோடு, கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை ஷங்கர் கழட்டிவிட்டதுக்கு காரணம் இதுதானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..
ஒருபக்கம், விஜயின் இடத்தை பிடிக்க சூர்யாவும் ஆசைப்படுவதாக கணிக்கப்படுகிறது. கங்குவா படத்திற்கு பின் இப்போது கார்த்திக் சுப்பராஜுடன் கை கோர்த்திருக்கிறார். இந்த கதை விஜயிடம் சொல்லப்பட்ட கதை என சொல்லப்படுகிறது. எனவேதான், சூர்யாவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.
ஒருபக்கம் தனுஷ், சிம்பு ஆகியோரும் போட்டி போட்டுகொண்டு படங்களை புக் செய்து வருகிறார்கள். படங்களே நடிக்காமல் இருந்த கமல்ஹாசனும் மீண்டும் படங்களை நடிக்க துவங்கிவிட்டார். அதேபோல், ஜெயிலர் பட வெற்றிக்கு பின் ரஜினி வேட்டையன் படத்திற்கு போனார். அதோடு, லோகேஷின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.