Connect with us
suriya

Cinema News

உயிரை கையில் பிடிச்சிக்கிட்டே டேன்ஸ் ஆடிய சூர்யா!.. செம ரிஸ்க்கா இருக்கே!.. அட அந்த படமா?!…

வெளியில் இருந்து பார்ப்பதற்கு சினிமாவில் நடிப்பது சுலபம் போல தெரியும். ஆனால், அதில் இருக்கும் நடைமுறை பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் என்ன என்பது சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும், அதிக சம்பளம், ரசிகர்கள், புகழ் என பல காரணங்கள் இருப்பதால் அந்த சிரமங்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்துவது சுலபமில்லை. ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு போன்ற நடிகர்களை வைத்துக்கொண்டு பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும். போக்குவரத்தும் ஸ்தம்பித்து போகும். அதனால்தான், பெரும்பாலான படப்பிடிப்புகளை ஸ்டுடியோவில் நடத்துகிறார்கள்.

இதையும் படிங்க: விரைவில் சின்னத்திரையில் தலைகாட்டப் போகும் வடிவேலு! சீரியல்னுதான் பாக்குறீங்க.. அதான் இல்ல

சில சமயம் பொது இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது சில ரசிகர்கள் பெண்களிடம் சில்மிஷத்திலும் ஈடுபடுவார்கள். அதுவும் பிரபல நடிகை எனில் சொல்லவே தேவையில்லை. பல படப்பிடிப்புகள் விஜயகாந்த் ரசிகர்களை விரட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா உயிருக்கு பயந்து கொண்டே ஒரு பாடலுக்கு நடனமாடி சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்து 2009ம் வருடம் வெளியான திரைப்படம் அயன். இந்த படத்தில் ‘பல பலக்குற பகலா நீ’ பாடலின் படப்பிடிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா எனும் நாட்டில் நடந்தது. அங்கு ஒரு இடத்தில் தங்கி இருந்த படக்குழு வெளியே வரவில்லை.

இதையும் படிங்க: யார பார்த்து கலாய்க்கிறீங்க… டாப் குக்கு டூப் குக்கு ஷோக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம்…

ஏனெனில், அங்கு இருக்கும் மக்கள் எப்போதும் யாரையாவது ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவார்களாம். உதாரணத்திற்கு, கூலிங் கிளாஸ் அணிந்து வந்து ஒருவர் மீது மோதி கண்ணாடியை உடைத்துவிட்டு பணத்தை பிடிங்கிவிடுவார்களாம். காசு இல்லை என சொன்னால் கத்தியை காட்டி குத்தி கொன்றுவிடுவேன் என மிரட்டுவார்களாம்.

அப்படி இருந்தும் அது போன்ற ஒரு இடத்தில் அந்த பாடல் எடுக்கப்பட்டது. சூர்யாவும் உயிரை கையில் பிடித்துக்கொண்டே இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த தகவலை அந்த பாடலுக்கு நடன அசைவுகளை அமைத்த நடன இயக்குனர் தினேஷ் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

Continue Reading

More in Cinema News

To Top