![](https://cinereporters.com/wp-content/uploads/2024/05/virumani.jpg)
Cinema News
விருமாண்டி பார்ட் 2ல கமல் நடிக்கிறாரா?.. லீக்கான போட்டோவால் கன்ஃபியூஸான ரசிகர்கள்!..
மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் தக் லைஃப் எனும் படத்தில் நடித்து வருகிறார். செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் மணிரத்னம் தேர்வு செய்தது நடிகர் சிம்புவைத்தான். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிம்பு அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மானை வைத்து தக் லைஃப் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார். படத்தின் தொடக்கத்திலேயே கமல்ஹாசன், ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..
ஆனால், சில பல பிரச்சினை காரணமாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன் காரணமாக தற்போது சிம்பு மற்றும் அசோக் செல்வன் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக கூறுகின்றனர்.
டெல்லியில் உள்ள அனுமான் கோயிலில் தற்போது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக லீக்கான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் கமலுக்கு அருகே நடிகை அபிராமி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் இது தக் லைஃப் படமா அல்லது விருமாண்டி 2வா? என கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..
மேலும், சிம்பு காளை படத்தில் இருந்த கெட்டப்பில் இருக்கிறார். மேலும், நாசர், லியோ படத்தில் கடைசியாக நடித்து மிரட்டிய வையாபுரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கமல்ஹாசனின் லுக்கும் அப்படியே விருமாண்டி படத்திலிருந்து அதைப் போலவே யங்காக இருப்பதை பார்த்த ரசிகர்கள் கன்ஃப்யூஸ் ஆகியுள்ளனர்.
இந்த படம் எப்படி வரப் போகிறது என்றும் நாயகன் படத்தைப் போல அடுத்த தரமான சம்பவத்தை செய்ய மணிரத்னம் காத்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். தக் லைஃப் படத்தின் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன் வேறு ஒரு தோற்றத்தில் இருந்தாரே அந்த லுக்கில் இந்த படத்தில் அவர் நடிக்க வில்லையா என்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…