கொடுத்து வச்ச சித்தார்த்!.. தமன்னாவை விட பால்கோவா மாதிரி இருக்காரே!.. அதிதி ராவ் அழகோ அழகு!..

Published on: May 21, 2024
---Advertisement---

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடிகை அதிதி ராவை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அதிதி ராவ் வெப் தொடர்களிலும் அதிகம் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஜூபிலி வெப்சீரிஸ் அதிதி ராவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ஹீரமண்டி வெப் தொடரிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: ஆஹா!.. என் தலைவனை பார்த்துட்டேன்!.. வடிவேலுவை பார்த்த குஷியில் ஜிபி முத்து வெளியிட்ட பிக்ஸ்!..

மகா சமுத்திரம் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து அதிதி ராவ் நடித்த நிலையில் இருவருக்கும் இடையே படத்தில் எந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது அதைவிட நிஜத்திலும் அதிகமாகவே ஒர்க் அவுட் ஆகிவிட்ட நிலையில், இருவரும் காதல் பறவைகளாக வானில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தனர்.

திருமணத்துக்குப் பிறகும் நடிக்கும் முடிவில் தான் அதிதி ராவ் உள்ளார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி விவாகரத்து நடைபெற்ற நிலையில், சித்தார்த் நிலைமையும் அதேதான். இருவரும் இரண்டாம் திருமணத்தை விரைவில் செய்து கொள்ள உள்ள நிலையில், சமீபத்தில் ரகசியமாக தெலங்கானாவில் உள்ள கோயிலில் நிச்சயம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களை கூட அவர்கள் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு முன்னாடியே ரிட்டயர்டு பார்ட்டி தான்!.. லேடி சூப்பர் ஸ்டார் சோலியை முடித்த பிரபலம்?..

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் அதிதி ராவ் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு தனது பால்கோவா அழகை பக்காவாக காட்டி வருகிறார்.

தமன்னா என்ன தமன்னா இவர் தங்கம் போல ஜொலிக்கிறாரே என ரசிகர்கள் அதிதி ராவின் படங்களைப் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும், சித்தார்த் ரொம்பவே கொடுத்து வச்சவர் என்றூம் பதிவிட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதைக் கவனிச்சீங்களா?.. இவ்ளோ விஷயங்கள் இருக்கா?..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.