Connect with us

Cinema News

டிஆர்பியில் முன்னணியில் இருந்த சீரியல்.. ஒத்த ஆளால் மொத்தமா போச்சு… சீக்கிரம் எண்ட் கார்ட் போட போறாங்களாம்!…

Ethirneechal: தமிழ் சீரியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட முக்கிய சீரியலாக இருந்தது எதிர்நீச்சல். ஆனால் தற்போது சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு குறைந்து இருக்கும் நிலையில் விரைவில்  தொடருக்கு முழுக்கு போட டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சீரியலை ஆண்கள் முதல் இளவயதினர் என அனைவரையும் கட்டி போட்டது எதிர்நீச்சல் சீரியல். இத்தொடரில் குணசேகரன் கேரக்டரில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து நடித்திருப்பார். அவரின் எதார்த்தமான நடிப்பும், கோவமான டயலாக்குகளும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வைரல் ஆனது. இதனால் டிஆர்பி யில் எதிர்நீச்சல் சீரியல் உச்சத்தில் இருந்தது.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

இந்த சீரியல் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் வரை கூட செல்லும் என பலரும் பேசி வந்த நிலையில் திடீரென நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். சீரியலின் முக்கிய கேரக்டரான அவருக்கு மாற்றாக வேல ராமமூர்த்தி நடிக்க வந்தார்.முதல் சில எபிசோட்களிலேயே  இவரால்  குணசேகரன் கேரக்டருக்கு உயிர் கொடுக்க முடியாது என ரசிகர்கள் முடிவு எடுத்தனர்.

வேல ராமமூர்த்தி அக்மார்க் கிராமத்து வில்லன் போல மட்டுமே இருப்பதாகவும், அவரை தமிழ் பெண்களால் சீரியலில் ரசிக்கும் அளவு இல்லை எனவும் தொடர் பேச்சுகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இதனால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடி வாங்கியது.  எழுநூறு எபிசோடு மட்டுமே தாண்டி இருக்கும் எதிர்நீச்சல் சீரியலை விரைவில் முடிக்க டிவி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறதாம்.

இதையும் படிங்க: உள்ளத உள்ளபடியா எடுத்தா நடிக்கலாம்… உங்களுக்கு இருக்க நக்கல் குறையாது சாரே… வைரலாகும் சத்யராஜ்!…

Continue Reading

More in Cinema News

To Top