கல்யாணத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு ராஜிக்கு வந்த வாய்ப்பு… கணவர் கொடுத்த சூப்பர் ஐடியா!

Published on: July 17, 2024
---Advertisement---

தமிழ் சீரியலில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில் என்ற ரீதியில் பலர் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வரும் நிலையில், கதாநாயகி சோவில் கலந்துகொண்டு ரன்னர் அப்பாக வந்த ஷாலினி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் ராஜீயாக கலக்கி வருகிறார்.

சின்ன வயதிலிருந்து நடனத்தில் ஆர்வம் இருந்தவர் ஷாலினி. அவர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நடன நிகழ்ச்சிக்காக நடன பள்ளியைத் தேட 24 ஸ்டுடியோஸ் என்ற நடன பள்ளியை கண்டுப்பிடித்தார். அதை நடத்தி வந்த பிரபுவுக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்கிறது. இதை தொடர்ந்து கல்லூரியின் மூன்றாம் வருடத்திலேயே இருவருக்கும் திருமணம் முடிகிறது.

இருவருக்குமே நடனம் என்றால் பிடிக்கும் என்பதால் தங்களுடைய கல்யாணத்தில் சில ஆல்பம் பாடல்களை உருவாக்குகின்றனர். அந்த பாடலின் வீடியோக்கள் பல மில்லியன் தாண்டி வைரலான நிலையில் இன்ஸ்டால் வீடியோ போடுவதை தம்பதி வழக்கமாக செய்து வந்திருக்கின்றனர். அப்பொழுது அவருக்கு கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆடிஷன் வரக்கூடிய ஒரு வாய்ப்பு வருகிறது.

ஆனால் முதலில் ஷாலினி இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருந்தும் கணவர் பிரபு உன்னால் எல்லாம் முடியும் எனக்கூறி அவருக்கு கஜினி படத்தில் அசினின் ஒரு காட்சியை எடுத்துக் கொடுத்து இதை பத்து தடவை பார்த்துவிட்டு உனக்கு என்ன வருகிறதோ அதை வீடியோவாக எடுத்து விடு எனக்கு கூறி சென்று இருக்கிறார்.

ஷாலினையும் கணவர் சொன்னதை அப்படியே செய்து வீடியோ அனுப்பி விட அவருக்கு விஜய் டிவியிலிருந்து ஆடிஷன் வரக்கூடிய அழைப்பு வருகிறது. அங்கு போனவருக்கு கூட்டத்தைப் பார்த்து முதலில் பயம் வந்து வீட்டுக்கு போய்விடலாம் என கணவரிடம் கூறியிருக்கிறார். இருந்தும் பிரபு இவரை சமாதானம் செய்து வாரணம் ஆயிரம் காட்சியை நடிக்க வைக்க அங்கும் செலக்ட் ஆகிறார் ஷாலினி.

பின்னர் கடைசி ஆடிஷனிலும் செலக்ட்டாகி ப்ரோமோ சூட்டிற்கு சென்றபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தவறுதலாக விழுந்து காலில் பெரிய அடிபட்டிருக்கிறது. அப்போதும் ஷாலினி இது வேண்டாம் எனக் கூற கணவர் பிரபு இதை செய்தே ஆகவேண்டும் என அவரை பிடித்து செய்ய வைத்திருக்கிறார்.

கோயமுத்தூரில் ஐடி வேலை பார்த்து வரும் ஷாலினி ஒவ்வொரு முறை ஷோக்கான தேதியில் சென்னை வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 10 மட்டுமே கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு கணவர், குடும்பம் என ஷாலினிக்கு பாதுகாப்பாக வந்துள்ளனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஷாலினி ரன்னராக 3 லட்சம் பரிசை வென்றார். தற்போது வேலையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment