Cinema History
இளையராஜாவின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஒரே பாடல் இதுதான்..! அப்புறம் என்னாச்சு?
‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ன்னு இளையராஜாவின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் பாடியுள்ளார். அதன்பிறகு அவர் ஏன் பாடவில்லை. அது என்னன்னு பார்க்கலாமா…
தமிழ்த்திரை உலகில் இப்போ உள்ள பாடகர்கள் யாரும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கவில்லை. காரணம் பாடலே புரியவில்லை. வெறும் மியூசிக் தான் வருகிறது. அப்படி என்றால் பாடகர்கள் எப்படி நினைவுக்கு வருவார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தக் காலத்தில் எந்த நடிகர் நடித்தாலும் பாடல் சூப்பர்ஹிட் ஆகிவிடும்.
Also read: தமிழ் சினிமாவுல முதன்முதலா ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம்… அப்பவே அது சூப்பர்ஹிட் படமாச்சே!
அதனால் அந்தப் பாடலை யார் பாடி இருப்பார் என்று ரசிகர்கள் ஒருவருக்கொருவர் கேட்டும், பத்திரிகைகளில் படித்தும், ரேடியோவில் கேட்டும் தெரிந்து கொள்வர். அதனால் அவர்களது பெயர் நிலைத்து நின்றன. குறிப்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, சித்ரா, ஜானகி, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், லதா மங்கேஷ்கர், ஆஷாபோன்ஸ்லே என சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பாடகியும் நம் நெஞ்சில் நிலைத்து நின்றார். அவர் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. உச்சஸ்தாகியியில் இவர் பல பாடல்களைப் பாடுவார். அதுதான் இவரது ஸ்பெஷல். அது மட்டுமல்லாமல் இவரது குரலும் வசீகரமானது.
கிளாமரான பாடல்கள் பாடும் இவர் ஆன்மீகப் பாடல்களிலும் வெளுத்துக் கட்டினார். அதனால் இவரைத் தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. இவர் பாடிய பல பாடல்கள் இசைக்கச்சேரிகளுக்கு பக்கபலமாக இருக்கும். குறிப்பாக முத்துக்குளிக்க வாரீகளா?, இலந்தைப் பழம் ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.
இவர் பல முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரே ஒரு பாடல் தான் பாடியுள்ளார். அது என்னன்னு தெரியுமா? ‘நல்லதொரு குடும்பம்’ என்ற படம். சிவாஜி நடித்த இந்தப் படத்தில் தான் இளையராஜா இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ‘ஒன் டூ சாச்சா’ என்ற பாடலைத் தான் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். அதன்பிறகு அவரது இசையில் பாடல்களே பாடவில்லை.
இருவருக்கும் பிரச்சனையா என பல வதந்திகள் வந்தன. அந்த நேரம் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. சண்டை என்று எதுவும் இல்லை. பாடலுக்கான சூழலும், சந்தர்ப்பமும் அமையாதது தான் காரணம் என்று விளக்கம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: திடீரென பெண்களுக்கு குரல் கொடுக்கும் சூர்யா குடும்பம்… என்ன சம்பவம் தெரியுமா?
தமிழ் மட்டும் அல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 10க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடி அசத்தியுள்ளார் எல்.ஆர்.ஈஸ்வரி.