மருமகள் முதல் கயல் வரை… இன்றைய சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்

Published on: November 29, 2024
sun serials
---Advertisement---

Sun TV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ தொகுப்புகள்.

கயல்: சரவணன் வீடு ஊர் பெரியவரிடம் கயிலை காட்டி யார் என தெரிகிறதா என கேட்க, நீ கட்டிக்க போற பொண்ணா என்கிறார். உடனே சரவணன் ஆமாம்  எனக் கூறிவிடுகிறார். அவரை எழில் நீ கயலை நெருங்குவது தப்பு என்கிறார். சரவணவேலு ஆட்களை செட் செய்து எழிலை குத்தி விடுகிறார்.

இதையும் படிங்க: அவரு சூர்யாவுக்கு மட்டுமில்ல!.. தமிழ் சினிமாவுக்கே ரொம்ப ஆபத்து!.. பொங்கி எழுந்த பிஸ்மி..!

மருமகள்: ஆதிரை நம்ம சண்டை குறித்து அப்பாவிடம் எதுவும் சொல்லாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்கிறார். இதை கேட்கும் பிரபு இதை வைத்து ஆதிரையை நாம் மிரட்டலாமே என யோசித்துக் கொண்டிருக்கிறார். ஆதிரை அப்பா வாங்கிவந்த புடவையை சித்தி பார்த்துக் கொண்டிருக்க இந்த புடவை உனக்கு இல்லை என்கிறார்.

யாருக்கு எனக் கேட்க ஆதிரைக்கு என்கிறார். ஆதிரை சித்தி அவரிடம் நீ உண்மையாலே சந்தோஷமா இருக்கியா எனக் கேட்க, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் ஆதிரை. உனக்கும் மாப்பிள்ளைக்கும் பிரச்சினையின் கேள்விப்பட்டேன் என்கிறார் சித்தி.

சுந்தரி: வெற்றி சுந்தரியிடம் அவங்க அம்மா வந்து கூப்பிட்டால் கூட தமிழ் போக மாட்டா என்கிறார். திடீரென தமிழ் மண்டபத்தில் இருந்து காணாமல் போக எல்லாரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

மூன்று முடிச்சு: நந்தினி அப்பா, இதுக்கும் சுந்தரவல்லி அம்மாவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என தோன்றுவதாக கூறுகிறார். ஆனால் சூர்யா எனக்கு அப்படி தோணலை என்கிறார். காவல் நிலையத்தில் இருக்கும் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீங்கள் கெஞ்சுவதால் ஏதும் மாறப்போகிறதா?

இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய எஸ்கே.. எதுக்கு தெரியுமா?..

அவன் என்ன வேணாலும் பண்ணட்டும் என்கிறார். காவலர் அவர்கள் குடும்பத்தை அழைத்து வந்து காரில் யாரோ இருக்கிறார்கள் யார் என பாருங்கள் என்கிறார். திறந்து பார்த்தால் உள்ளே நந்தினி இருக்கிறார்.

சிங்கப் பெண்ணே: மித்ரா மகேஷ் அம்மாவிடம் இந்த பிரச்சனைக்கு பின்னர் உங்களையும் என்னையும் மகேஷ் நம்புவானா என்கிறார். ஆனந்தி அப்பாவிடம் ஜோசியர் கூடப்பிறந்தவளால கோகிலா கல்யாணத்தில் அவமானம் நடந்திருக்கு. இப்பவும் நடக்கணும்னு இருக்கு என்கிறார். ஆனந்தி அன்புவிடம் கூட வரணும்னு ஆசைப்படறா வந்துட்டு போகட்டுமே என்கிறார். அன்பு நீ சொன்னா சரிதான் என கூற ஆனந்தி வாந்தி வர பாத்ரூம் செல்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.