Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.

மீனா முத்துவுக்காக காரில் நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் சொல்லி உதவி கேட்கிறார். அவரும் நான் எதுவும் சொன்னா திட்டுவாரு. இருந்தாலும் உனக்காக பேசி பார்ப்பதாக சொல்லி அழைத்து செல்கிறார்.

மனோஜ் விபூதியை பூசிக்கொண்டு ரோகிணிக்கு சவுக்கடி கொடுக்க வருகிறார். அவர் பயப்பட விஜயா ரோகிணிக்கு பேய் ஓடணும்னா செஞ்சி தான் ஆகணும் எனக் கூறி அடிக்க சொல்கிறார்.

ரோகிணியில் காலில் மனோஜ் ஓங்கி அடிக்க அவர் அலறி எழுந்து அமர்கிறார். பேய் போகணும்ல என கூற என் உயிர் போய்டும் போலருக்கு எனத் திட்டுகிறார். மனோஜை அழைத்து சென்று விஜயா சமாதானம் செய்ய ரோகிணி தேவையில்லாமல் பொய் சொல்லி மாட்டிக்கிட்டு அடி வாங்குறோமே என அழுகிறார்.

போலீஸ் ஸ்டேஷன் வரும் முத்துவுக்கு இன்ஸ்பெக்டர் சாதகமாக பேச கான்ஸ்டெபிளை திட்டுகிறார். முத்து கஸ்டமருக்காக தான் செஞ்சேன் சார். நீங்க வேணா கால் பண்ணி பாருங்க என பேச அவர் நீ சும்மா இரு. அதான் பேசிட்டு இருக்கேன்ல உனக்கு சிபாரிசு வேற எனச் சொல்லி முத்துவின் காரை கொடுக்க சொல்கிறார்.

முத்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பி வீட்டில் மீனாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் தங்களுடைய கல்யாண நாளை கொண்டாட இருப்பதாக கூறி பத்திரிக்கை அடித்து வந்து கொடுக்கிறார்கள். மீனாவிடம் டெக்கரேஷன், விஜயாவிடம் டான்ஸ் எனச் சொல்லி விடுகிறார்கள்.

சரி நான் டிராவல்ஸ் பார்த்துக்கிறேன் என்கிறார் முத்து. எங்க எல்லார் பேரும் ஓகே. இந்த மனோஜ் பேரு எதுக்கு இருக்கு எனக் கேட்க எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *