என்னதான் பெரிய நடிகரின் புதிய படம் தயாரிப்பில் இருந்தாலும் அந்த படம் தொடர்பான அப்டேட்டுகள்தான் ரசிகர்களுக்கு முக்கியம். அதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் எப்போதும் ஆவலாக இருப்பார்கள். குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அவர்கள் நடிக்கும் புதிய படங்கள் தொடர்பான அப்டேட்டை எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி எல்லா நடிகர்களின் படங்களின் அப்டேட்டும் வெளியாகாது. அதுவும் அஜித், சிம்பு ஆகியோரின் படங்கள் என்றால் அப்டேட் வருவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும்.ஆனால் இந்த டிசம்பரை பொறுத்தவரை பல நடிகர்களின் புதிய படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது.

டிசம்பர் 4ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. டிசம்பர் 6 அல்லது 8ம் தேதி சூர்யா நடிக்கவுள்ள அவரின் 47வது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் என்பதால் அன்று அவரின் 173வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற அறிவிப்போடு ஜெயிலர் படத்தின் டீசரும் வெளியாகும் என்கிறார்கள்.

டிசம்பர் 27ம் தேதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதுபோக சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் தொடர்பான அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அரசன் படத்தின் ஷூட்டிங் வருகிற 6 அல்லது 8ம் தேதி துவங்கவிருக்கிறது.

ஒருபக்கம் தனுஷின் 54 வது படம் தொடர்பான முக்கிய அப்டேட் இந்த மாதம் வெளியாகும் என்கிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ள பராசக்தி படத்தின் டீசரும் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது.

இப்படி நான் ஸ்டாப் அப்டேட்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட செய்யப்போகிறது இந்த டிசம்பர்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *