ரஜினி:
தற்போது கோவாவில் நடைபெற்ற விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய இந்திய ஒன்றிய அரசு ரஜினியை கௌரவித்துள்ளது. 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் அடைந்த வெற்றி சாதனை அவருடைய உழைப்பு என அவருடைய இந்த 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெரிய விருதை வாங்கிய ரஜினியை தமிழ் சினிமா ஏன் கொண்டாட மறந்தது என்பதுதான் இப்போது வேதனைக்குள்ளான விஷயம்.
இதைப் பற்றி வலை பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இன்று சினிமாவை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும் அருகில் இருந்து பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இங்கு ஒரு நடிகருக்கு பட வாய்ப்பு கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய சிரமமான விஷயம். அதை அடைவதற்கு பின்னால் எவ்வளவு பெரிய போராட்டம் இருக்கும். அதன் பிறகு அந்த பட வாய்ப்பு கிடைத்து அந்தப் படத்தை மக்களிடம் உரிய முறையில் கொண்டு போய் சேர்த்து அந்தப் படம் வெற்றி படமாகி அதன் பிறகு அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அப்படிங்கிறது எல்லாம் இங்கு மிகப்பெரிய விஷயம்.
கருணை இல்லாத சினிமா;
இதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. சினிமாவில் எத்தனை வருடங்கள் வெற்றி படங்களை கொடுத்து இன்று உச்சாணி கொம்பில் இருந்தாலும் திடீரென நீங்க நடித்த ஒரு படமோ இரண்டு படமோ மூன்று படமோ வரிசையாக தோல்வியாகிவிட்டது என்றால் அடடா இவர் இத்தனை வருஷம் வெற்றி படங்கள் கொடுத்தாரே இவர் ஒரு வெள்ளி விழா நாயகன் ஆச்சே அப்படின்னு இந்த சினிமாத்துறை உங்களை கருணையோடு அணுகாது.

அடுத்த நிமிடமே உங்களை ஒரு கருவேப்பிலை மாதிரி பயன்படுத்தி தூக்கி கீழே போட்டு விடுவார்கள். அதுதான் சினிமா துறையின் இயல்பு. இன்றைய சூழ்நிலையில் சினிமாத்துறை என்பது ஒரு சூதாட்டம் தான். இப்படி ஒரு தன்மையுள்ள படத்துறையில் ஒருவர் 50 வருடம் நீடித்து நிலைத்து அதுவும் அந்த நம்பர் ஒன் நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்த ஒரு கிரீடத்தை இழக்காமல் இருக்கிறார். இது வெறுமனே ஒரு அதிர்ஷ்டத்தில் விளைந்ததாக நாம் பார்க்க முடியாது. நிச்சயமாக இந்த வெற்றிக்கும் ரஜினியின் இந்த உயரத்திற்கும் அவருடைய உழைப்பும் திறமையும் தான் முதன்மையான காரணம்.
பாசிட்டிவான விஷயம்:
அதன் பிறகு தான் அவருக்கு அமைந்த வாய்ப்புகள். அதற்கு கிடைத்த வெற்றி அதற்கு கீழே நாம் எடுக்கலாம். ஆனால் பிரதான காரணம் என்னவென்றால் ரஜினியின் திறமையும் உழைப்பும் தான். அப்பேர்ப்பட்ட திறமையாளருக்கு உழைப்பாளருக்கு இந்திய ஒன்றிய அரசு உரிய கௌரவத்தை கொடுத்திருக்கிறது என்றால் அது ஒரு பாசிட்டிவான விஷயம் தான். அதையும் தாண்டி ஊடக கவனம் எல்லாம் இதற்கு இல்லை .ஏதோ ஒரு மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் விழாவை நடத்தி அங்கு ஒரு கேடயத்தை கொடுக்கிற மாதிரி எந்த ஒரு கவன ஈர்ப்பும் இல்லாமல் ஒரு சம்பிரதாயமாக நடத்தப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. இது நமக்கு ஒரு லேசான வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது என பிஸ்மி கூறியுள்ளார்.
