
latest news
Pandian Stores2: அப்பா பேச்சை கேட்ட அரசி… எதிர்த்து பேசிய ராஜி… அடுத்த நடக்க போவது இதுவா?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் நடக்க போகும் எபிசோட்களுக்கான வார புரோமோ குறித்த தொகுப்புகள்.
ராஜியின் விவகாரம் தெரிந்துவிட்ட நிலையில் அவர் குடும்பம் அடுத்து என்ன செய்ய இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ராஜியின் அம்மா அவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என முத்துவேலிடம் சொல்ல அவரும் அமைதியாக இருக்கிறார்.
ராஜியின் கல்யாண விவகாரம் திடீரென நடந்து இருந்ததால் அவருக்கும் கதிருக்கும் காதல் இருக்குமா என்பது அவர் குடும்பத்துக்கு சந்தேகத்தை எழுந்து இருக்கிறது. இதனால் அவர் எடுத்து இருக்கும் முடிவு அடுத்த பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் அரசியை பாண்டியன் அழைத்தது போல வீட்டு வாசலில் வடிவு மற்றும் முத்துவேல் ராஜியை அழைக்கின்றனர். அவரை உனக்கு விருப்பமில்லாமல் தானே கல்யாணம் நடந்தது. நீ நம்ம வீட்டுக்கு வா எனக் கேட்கிறார்கள்.

ராஜி உள்ளே சென்று கதிரிடம் அப்பா, அம்மா வந்து இருக்காங்க. என்னை வீட்டுக்கு அழைக்கிறாங்க. நான் போகட்டுமா எனக் கேட்க கதிரும் சரி நீ போ எனக் கூறிவிடுகிறார். ராஜியும் வெளியில் வர அவரை வடிவு கை பிடித்து அழைக்கிறார்.
ஆனால் ராஜி எனக்கு கதிர் முறையாக தாலி கட்டினான். எங்க திருமணமும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான் இங்க தான் இருப்பேன் எனக் கூறிவிடுகிறார். உள்ளே வந்து கதிரிடம் என்னை துரத்தி விட்டு நீ ஜாலியா இருக்கலாம் என நினைக்கிறீயா என மனதில் நினைத்து கொள்கிறார்.
இதனால் அடுத்து ராஜி மற்றும் கதிர் இருவருக்குமான காதல் விவகாரம் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தொடர் சுவாரஸ்ய கட்டத்தை அடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.