RioRaj; அறிமுக போஸ்டரே அட்டகாசமா இருக்கே.. ரியோவின் அடுத்த பட அப்டேட்

Published on: December 5, 2025
---Advertisement---

RioRaj:

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஃபார்முலாவை ஃபாலோ செய்து பல  நடிகர்கள் உருவாகி வருகின்றனர். பிரதீப் ரெங்கநாதன், சிவகார்த்திகேயன் எப்படி ஆரம்பகால படங்களில் காமெடியாக நடித்து ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தாரோ அதை போல் பிரதீப் ரெங்க நாதனும் அதே ஃபார்முலாவைத்தான் பின்பற்றுகிறார். இப்போது இவர்கள் வரிசையில் ரியோவும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸை ரசிக்க வைத்தது. இதுவரை பெண்கள் படும் கஷ்டத்தைத்தான் படங்களில் பெரும்பாலும் காட்டி வந்தார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஆண்களும் என்ன மாதிரியான கஷ்டங்களை அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை காமெடியாகவும் செண்டிமெண்டாகவும் காட்டியிருப்பார் படத்தின் இயக்குனர்.

ரியோவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் வெற்றிவாகை சூடிய ஆண்பாவம் பொல்லாதது படம் இப்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் அதற்கும் பெரும் வரவேற்பை கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில் ரியோவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு பிறகு ரியோ நான்கு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

rioraj

அதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இதில் ஒரு படத்தின் அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது, அந்தப் படத்தின் டைட்டில் லுக் நாளை காலை 11.11 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். அதற்கான அறிமுக போஸ்டர் என ஒரு போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. அறிமுக போஸ்டரே வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கின்றது.

அந்த போஸ்டரில் ரியோவின் தலையில் ஒரு பூனை ஏறி உட்கார்ந்த  மாதிரியும் ரியோவின் முகத்தில் லிப்ஸ்டிக் கரையும் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment