Tere Ishk Mein: புக் மை ஷோவில் எகிறும் டிக்கெட் முன்பதிவு!.. 2 நாளில் 50 கோடி வசூல்!..

Published on: December 5, 2025
---Advertisement---

தமிழ் பட நடிகராக இருந்தாலும் கடந்த பல வருடங்களாகவே நேரடி ஹிந்தி படங்களிலும் தனுஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரை மூன்று  நேரடி ஹிந்தி படங்களில் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவை எல்லாமே ஹிந்தி சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதில் அட்ராங்கி ரே, Raanjhanaa ஆகிய இரண்டு படங்களையும் ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். தற்போது அதே ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் Tere Ishk Mein. இந்த திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது.

தமிழில் இந்த படத்துக்கு பெரிய அளவு ப்ரமோஷன் செய்யப்படவில்லை என்பதால் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதேநேரம் ஹிந்தியில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் கடந்த இரண்டு நாளில் இப்படம் 35 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் பார்த்தால் இப்படம் இரண்டு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இப்படம் உலக அளவில் 100 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள்.

ஒருபக்கம் இந்தியாவில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிக அளவு பயன்படுத்தப்படும் புக் மை ஷோ இணையதளத்தில் Tere Ishk Mein படத்திற்கு டிக்கெட் முன்பதிவு மிகவும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. நேற்று மட்டுமே இந்த படத்திற்கு 310 ஆயிரம் அதாவது 3 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இதை தனுஷ் ரசிகர்கள் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment