LIK: மீண்டும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன்!.. செம கான்செப்ட்டை கையில் எடுக்கப்போறாராம்!…

Published on: December 5, 2025
---Advertisement---

Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததது. அதன்பின் லவ் டுடே என்கிற படத்தை அவரே இயக்கி நடித்தார். கோமாளியில் இயக்குனராக வெற்றி பெற்றவர் லவ் டுடேவில் நடிகராகவும் வெற்றி பெற்றார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் ஓடியது.

எனவே, இவரை வைத்து படமெடுக்க மற்ற இயக்குனர்களும் ஆசைப்பட்டார்கள். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் Dude ஆகிய படங்களில் நடித்தார். இதில், டிராகன் படம் வெளியாகி அசத்தலான வெற்றியை பெற்றது. எனவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக பிரதீப் மாறிவிட்டார்.

அவரின் LIK மற்றும் டியூட் ஆகிய இரு படங்களும் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிரதீப்பின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் அது இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும் நிலை உருவானது. எனவே, Dude படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரோ முடியாது என மறுத்துவிட LIK படத்தின் ரிலீஸை டிசம்பருக்கு தள்ளி வைத்துவிட்டனர்.

ஒருபக்கம், ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை பிரதீப் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், பிரதீப் அதை உறுதி செய்யவில்லை. ஒருபக்கம் அந்த படத்தை இயக்குவது லோகேஷ்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரதீப் ‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏன் நடிகர்களெல்லாம் ஒரே மாதிரி கதைகளில் நடிக்கிறார்கள். சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவர்கள் எதுவுமே செய்யவில்லை என எனக்கு தோன்றியது.

LIK படத்திற்கு பின் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை இயக்கி நடிக்கப்போகிறேன். அந்த கதையை கணிக்கவே முடியாது. வேறு ஒரு பிரதீப்பை ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என ஹைப் ஏற்றியிருக்கிறார். இதிலிருந்து அவர் ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்கவில்லை என்பது தெரியவருகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment