Parthiban:
வித்தியாசமான கதை சொல்லும் முறைகளுக்கு பேர் போனவர் நடிகர் பார்த்திபன். புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் அந்த படத்தில் தேசிய விருதையும் பெற்றார். இவருடைய முக்கியமான படைப்புகளில் புதிய பாதை, ஹவுஸ் ஃபுல், ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களை குறிப்பிடலாம். தற்போது இவர் இட்லி கடை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நான் தான் சிஎம்:
சமீபத்தில் தான் அந்த படத்திற்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். அடுத்ததாக அவரே இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படம் நான் தான் சிஎம். அரசியல் நையாண்டி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது பற்றிய சர்ச்சைகள் எழுந்ததால் தனிப்பட்ட முறையில் அதற்கான விளக்கத்தையும் அளித்தார் .
அது மட்டுமல்ல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக இருந்து வந்தார் பார்த்திபன். மீண்டும் அவர் புதிய பாதை படத்தின் தொடர்ச்சியை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கான தகவல் கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு முயற்சிகளை இவர் எடுத்தாலும் அவ்வப்போது சில நேரங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவார்.
சர்ச்சைகளில் சிக்கும் பார்த்திபன்:
- 2019 இல் இவருடைய இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அப்போது இந்த படத்தை பற்றி சிலர் ‘விருது கிடைத்தாலும் இந்த படம் சலிப்பை உண்டாக்கியது. இப்படி இருக்கையில் எப்படி இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்திருந்தார் பார்த்திபன்.
- அது மட்டுமல்ல உலகின் முதல் சிங்கள் ஷாட்டான லீனியர் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படத்தையும் அவர் இயக்க அது தொடர்பாகவும் சர்ச்சைகள் இழந்தன. தொழில்நுட்ப ரீதியாக அந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருந்தும் சில பேர் அந்த மாதிரி எதுவும் இல்லையே என்று சந்தேகம் எழுப்பினார்கள்.
- அதற்கும் பார்த்திபன் விளக்கம் அளித்து நான் செய்தது உலக அளவில் சாதனை என பேசி இருந்தார்.
அடுத்த சர்ச்சை:
இந்த வரிசையில் சமீபத்தில் அவர் அறிவித்த நான் தான் சிஎம் திரைப்படத்தின் போஸ்டரிலும் அரசியல் சார்ந்த குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறையவே எழுந்தன. அதற்கும் பார்த்திபன் இது சினிமா கற்பனை. அரசியலுடன் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.
அது மட்டுமல்ல எந்த ஒரு திரைப்பட விழாக்கள் ஊடக சந்திப்புகள் என விமர்சகர்களின் கேள்விக்கு அவர் நேரடியாகவும் கடுமையாகவும் பதில் அளிக்கும் பழக்கம் உடையவர். சில நேரங்களில் அவரின் பேட்டிகள் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் கடுமையாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். youtubeல் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு சில பேர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என பரப்பி வருகின்றனர். அந்த youtube லிங்கை டேக் செய்து ஒரு கேவல பிறவியாக வாழ வேண்டுமா? அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ இல்லை ஆறாவது அறிவோ உதவ வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.
