நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் அடுத்தநாள் அதாவது ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. முதலில் பராசக்தி படத்தை ஜனவரி 14-ம் தேதிதான் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் திடீரென ரிலீஸ் செய்தியை மாற்றினார்கள்.
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருங்கிய உறவினர் என்பதாலும் பராசக்தி படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் வெளியிடுவதாலும் இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. குறிப்பாக ஈரோட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியது கோபத்தை ஏற்படுத்தியதால்தான் பராசக்தியை ஜனநாயகனுக்கு போட்டியாக வேண்டுமென்றே களம் இறக்கிறார்கள் என பலரும் சொல்கிறார்கள்.
ஜனநாயகன் படம் மட்டும் வந்தால் தமிழகத்தில் உள்ள எல்லா முக்கிய தியேட்டர்களிலும் அந்த படம் ஓடி வசூலை பெறும். ஒரு வாரம் கழித்து பராசக்தி வருவதால் ஜனநாயகன் படத்தின் வசூல் பாதிக்காது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வந்தால் தியேட்டர்களை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இது ஜனநாயகன் படத்தின் வசூலை பாதிக்கும். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
கண்டிப்பாக பராசக்தி படத்திற்கு எதிராக நெகட்டிவ் ரிவ்யூக்களை பரப்புவார்கள். இன்னும் சொல்லப்போனால் ஜனநாயகன் படத்தோடு பராசக்தி படம் வருவதை விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களுமே விரும்பவில்லை. ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில்தான் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் கூல் சுரேஷ் ‘சிவகார்த்திகேயன் என் நண்பர்தான். அவருக்கு ஏன் இவ்வளவு அவசரம்?.. விஜய் சாரோடுதான் நீங்க மோதணுமா?.. ஒரு வாரம் இல்லைன்னா 10 நாள் கழிச்சு படத்தை விட்டால் என்ன ஆகப்போகுது?.. தியேட்டர் கிடைக்காத இந்த நேரத்துல தயாரிப்பாளர் கஷ்டத்தை புரிஞ்சி நடந்துக்கோங்க..
எப்படி இருந்தாலும் ஜனநாயகன் படத்துக்கு உலகம் முழுக்க எல்லா தியேட்டர்களையும் புடிச்சிடுவாங்க. அப்புறம் எப்படி பராசக்தி படத்திற்கு தியேட்டர் கிடைக்கும்?.. அப்படி கிடைக்காம போனா அந்த படத்தோட தயாரிப்பாளருக்குதானே நஷ்டம்’ என்று பேசியிருக்கிறார்.