Actor suriya: சுதா கொங்கரா - எஸ்.கே படத்தில் செம வில்லனாம்!.. அது அந்த நடிகரா?!..

by சிவா |   ( Updated:2024-11-09 22:51:40  )
Actor suriya: சுதா கொங்கரா - எஸ்.கே படத்தில் செம வில்லனாம்!.. அது அந்த நடிகரா?!..
X

#image_title

Actor suriya: ஏற்கனவே 2 படங்களை இயக்கியிருந்தாலும் இறுதிச்சுற்று படம் மூலம் கவனம் ஈர்த்தவர் சுதா கொங்கரா. மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா அமைத்திருந்த திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்தது.

சூரரைப்போற்று: இந்த பட வெற்றிக்கு பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை துவக்கினார் சுதாகொங்கரா. ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட்டை கொடுக்க நினைக்கும் வாலிபரின் கனவை படமாக இயக்கியிருந்தார். இது ஒரு உண்மை கதையாகும். இந்த படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் சூர்யா.

இதையும் படிங்க: Vidamuyarchi: குட் பேட் அக்லி படத்துக்கே ஆப்பா?… நல்லா போடுறாங்க ஸ்கெட்ச்!.. எல்லாம் அஜித் கையில இருக்கு!..

இந்த படத்திலும் சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் சுதா கொங்கரா. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்ததோடு தேசிய விருதும் பெற்றது. அதன்பின் இந்த படத்தை ஹிந்தியில் இயக்கினார் சுதா கொங்கரா. அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான இந்த படம் வெற்றியடையவில்லை.

புறநானூறு: அதன்பின் மீண்டும் சுதாகொங்கராவுடன் சூர்யா ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும், அந்த படத்தின் பெயர் புறநானூறு எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, 1965ம் வருடம் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது எனவும் சொல்லப்பட்டது.

ஆனால், அதில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் சர்ச்சையை எற்படுத்தும் என எண்ணிய சூர்யா அந்த காட்சிகளை மாற்ற சொன்னார். ஆனால், சுதா கொங்கரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். எனவே, வேறு ஹீரோவை தேடினார் சுதா கொங்கரா.

சிவகார்த்திகேயன்: தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க நிவின் பாலியிடம் படக்குழு பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஒருபக்கம், இந்த படத்தில் ஒரு பிரபலமான நடிகர் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இதுபற்றிய செய்தி வெளியாகும் எல்லோரும் ஆச்சர்யப்படுவார்கள் என ஹைப் ஏத்துகிறார்கள்.

இதையும் படிங்க: Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!… கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்… இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!

Next Story