ரஜினி படத்துல வில்லனா நடிச்சும் படத்துல வரலயே!.. கார்த்திக் அப்பாவுக்கு நடந்த சோகம்!..

by சிவா |
rajini
X

சினிமாவில் எப்படி வில்லன் நடிகர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி கலக்குவார்களோ அப்படி ஹீரோவாக நடித்த சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வில்லன் நடிகராக மாறுவார்கள். திரையுலகில் இதற்கு பல உதாரணங்கள் உண்டு. நடிகர் சத்தியராஜ் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

80களில் பல படங்களில் கற்பழிப்பு காட்சிகள் இருக்கும். அதில் அதிகம் நடித்தவர் சத்தியராஜ்தான். மேலும், வில்லனின் அடியாட்களில் ஒருவராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். டெரர் வில்லனாக இருந்தவரை மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் ஹீரோவாக மாற்றினார்கள். அதன்பின் பல வருடங்கள் ஹீரோவாக மட்டுமே நடித்தார் சத்தியராஜ். இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் முடிஞ்சாலும் வீட்டுக்கு போக மாட்டாரு கவுண்டமணி!.. என்ன செய்வாரு தெரியுமா?…

நடிகர் சரத்குமார், நெப்போலியான், மன்சூர் அலிகான் போன்றோர்களும் துவக்கத்தில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறினார்கள். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த திரைப்படம் முரட்டுக்காளை. இந்த படத்தில் அதுவரை கதாநாயகனாக மட்டுமே நடித்துவந்த ஜெய் சங்கரை வில்லனாக மாற்றினார் அப்படத்தின் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் ஜெய் சங்கர் வில்லனாக நடித்தார்.

முத்துராமன்

முத்துராமன்

அடுத்து அதே ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த திரைப்படம் போக்கிரி ராஜா. இந்த படத்திலும் ஹீரோவாக நடித்து ரிட்டயர்ட் ஆன நிலையில் இருக்கும் ஒருவரை வில்லனாக நடிக்க வைப்பது என முடிவெடுத்தார் பஞ்சு அருணாச்சலம். உடனே அவருக்கு நினைவுக்கு வந்தவர் முத்துராமன்.

இதையும் படிங்க: சர்ச்சை இயக்குனரின் மூக்கை உடைத்த கௌதம் வாசுதேவ் மேனன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க?

அவரை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது ‘ இத்தனை வருடங்கள் ஹீரோவாக நடித்துவிட்டு நன்றாக இருக்கிறேன். இனிமேல் வில்லனாக நடித்து ஹீரோவிடமெல்லாம் அடி வாங்க முடியாது’ என சொல்லி இருக்கிறார். ஆனால், அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார் பஞ்சு அருணாச்சலம்.

ஆனால், படத்தில் சில காட்சிகளில் அவர் நடித்திருந்த நிலையில் மரணமடைந்துவிட்டார். படத்தின் வில்லனாக அவர் நடித்திருந்தும் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. அதற்கு காரணம் படம் வெளியாகும் முன்பே அவர் மறைந்துவிட்டார். எனவே, ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபத்தோடே படத்தை பார்த்தால் அவரை வில்லனாக ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். இதனால் படமே தோல்வி அடைந்துவிடும் என கணக்குப்போட்ட ஏவிஎம் நிறுவனம் அவர் நடித்த எல்லா காட்சிகளையும் வெட்டி விட்டது.

Next Story