Cinema History
ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் ஹனிமூன்தான்!.. ஓப்பனாக பேசிய ரஜினி…
பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லு முல்லு படத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்த போது அவரை பேட்டியெடுக்க ஒரு பெண் நிருபர் வருவதாக சொல்லப்பட்டது. அப்போது, அதுதான் தனது வருங்கால மனைவி என்பது ரஜினிக்கு தெரியாது. அதேபோல், தனது வருங்கால கணவரைத்தான் பேட்டி எடுக்கப்போகிறோம் என்பது லதாவுக்கும் தெரியாது.
முதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு பிடித்துப்போனது. லதாவின் சகோதரியை திருமணம் செய்த ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் பேசி லதாவின் குடும்பத்தை சம்மதிக்க வைத்தார் ரஜினி. தனது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் தவிர யாரையும் அழைக்க வேண்டாம் என முடிவெடுத்த ரஜினி திருப்பதில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: பெரிய மனுஷன்யா.. வந்த வாய்ப்பை தவற விட்ட விஜய்! மீண்டும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரஜினி
ஆனாலும், பத்திரிக்கையாளர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதால் அவர்கள் எல்லோரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். லதாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். என் சகோதரரை சம்மதிக்க வைக்க சில மாதங்கள் ஆகிவிட்டது. நான் வாழ்க்கையில் எல்லா ஏற்ற இறக்கங்களையும் பார்த்தவன். நாளை திருப்பதியில் அதிகாலை 3.30 மணிக்கு திருமணம். நீங்கள் யாரும் என் திருமணத்திற்கு வரவேண்டாம்.
திருமண புகைப்படத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். அதை நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளுங்கள். சில நாட்கள் கழித்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறேன். அதற்கு கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கூப்பிடுகிறேன். தயவு செய்து என் திருமணத்திற்கு வரவேண்டாம்’ என்றார் ரஜினி.
இதையும் படிங்க: ரஜினி போதைக்கு விஜய் ஊறுகாயா?.. லால் சலாம் ஆடியோ லாஞ்சில் மீண்டும் அரங்கேறிய காக்கா – கழுகு மேட்டர்!
அப்போது ஒரு நிருபர் ‘வந்தா?’ என கேட்க, ரஜினிக்கு கோபம் வந்துவிட்டது. ‘உதைப்பேன்’ என்றார். அதற்கு அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்படி பேசியதற்காக நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பின் ஒரு நிருபர் ’தேனிலவுக்கு எங்கே போறீங்க?’ எனக்கேட்க, ரஜினியோ கூலாக ‘தேனிலவா?. ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் தேனிலவுதான்’ என சிரித்துகொண்டே சொன்னார்.
அடுத்த நாள் திருப்பதியில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ லதாவின் கழுத்தில் ஒரு சாதாரண மஞ்சள் கயிறை கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். சில நாட்கள் சொன்னதுபோலவே வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார். அதில், சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எப்படி இப்படிலாம் படம் பண்றீங்க?!.. நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!. எஸ்.கே-வை ஃபிளாட் ஆக்கிய ரஜினி…