படகு ஓட்டவும் தெரியாது.. நீச்சலும் தெரியாது! ஆனால் டூப் வேண்டாம் - படகு துரத்தல் காட்சியில் ரஜினி நடித்த ரகசியம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப மக்கள் மத்தியில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக பெரும் ஆளுமையாக அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை கட்டி காத்து வருகிறார் ரஜினிகாந்த். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராகவே ரஜினி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எத்தனையோ புது புது நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டி வருகின்றன. இந்த நிலையில் ரஜினியை பற்றி எஸ்.பி. முத்துராமன் சொன்ன ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. ரஜினி மற்றும் எஸ்.பி.எம் கூட்டணியில் முதன் முதல் வெளி நாட்டு படப்பிடிப்பு என்றால் அது ‘பிரியா’ படத்திற்குதான்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள் என்னென்ன?.. வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தப் படத்திற்காக குறுகிய காலத்தில் அதிக படப்பிடிப்புகளை திட்டமிட்டு அதிகாலை 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பை நடத்தினார்களாம். இவர்கள் இருக்கும் இடத்திற்கும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் 20 மைல் தொலைவு இருக்குமாம். வாகன வசதி கூட கிடையாதாம். நடந்தே தான் செல்வார்களாம். செல்லும் போது கேமிராக்கள் மற்ற உபகரணங்கள் என அனைத்தையும் சரி சமமாக ரஜினி உட்பட பல பேர் சுமந்து கொண்டுதான் சென்றார்களாம்.

பிரியா படத்தில் படகு துரத்தல் காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சியை படமாக்கும் போது க்ளோசப்பில் ரஜினியை வைத்து எடுத்து விட்டார்களாம். மற்றவைகளை டூப் போட்டு எடுத்துவிடலாம் என நினைக்க டூப் எல்லாம் வேண்டாம். நானேதான் நடிப்பேன் என்று அடம்பிடித்தாராம் ரஜினி. இதில் ரஜினிக்கு நீச்சலும் தெரியாதாம். படகு ஓட்டவும் தெரியாதாம்.

இதையும் படிங்க: 500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

ஆனால் படத்திற்காக ஒரு மணி நேரத்தில் படகு ஓட்ட கற்றுக் கொண்டாராம். இருந்தாலும் ரஜினியின் பாதுகாப்புக்காக அவரை தொடர்ந்து ஒரு படகையும் கொண்டு சென்றார்களாம் படக்குழு. படகை மிக வேகமாக ஓட்டினாராம் ரஜினி. அவர் வேகத்திற்கு கேமிராவை கொண்டு செல்ல இயலவில்லை என ஒரு கட்டுரையில் எஸ்.பி.எம். தெரிவித்திருக்கிறார்.

 

Related Articles

Next Story