நோ ஷூட்டிங்.. ஒன்லி ஃபாரின் டூர்!.. ஜாலியாக ஊரை சுற்றும் சிம்பு!.. கதறும் தயாரிப்பாளர்கள்...
Actor simbu: தமிழ் சினிமாவில் நிஜமான சகலகலா வல்லவனாக வலம் வந்த டி.ராஜேந்திரன் மகன்தான் சிம்பு. சிறு வயது முதலே அப்பா டி.ஆர் இயக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். குழந்தை நட்சத்திரமாக நடித்து சில ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அதே அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக மாறினார்.
இப்போது வரை பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். அதில் சில படங்கள் சூப்பர் ஹிட படமாக அமைந்தது. சிறு வயது முதல் சினிமாவில் இருப்பதால் கதை, திரைக்கதை, இயக்கம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் சிம்புவுக்கு நல்ல அறிவு உண்டு. பல திரைப்படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். நன்றாக நடனமாட தெரிந்த நடிகரும் கூட.
இதையும் படிங்க: என்கிட்ட உன் வேலை பலிக்காது!.. மணிரத்னம் செஞ்ச வேலையில் ஆடிப்போன சிம்பு…
ஆனாலும் சினிமாவில் சிம்பு இருக்க வேண்டிய இடம் என்பது வேறு. ஆனால், அவர் இருக்கும் இடம் என்பது வேறு. ஏனெனில், திரையுலகத்தில் அவர் வாங்கிய கெட்ட பெயர்கள்தான் அதற்கு காரணம். படப்பிடிப்புக்கு நேரத்திற்கு சரியாக வரமாட்டார்.. சில நாட்கள் வரவே மாட்டார்.. திடீரென சம்பளத்தை சேர்த்து கேட்பார் என அவர் மீது பல புகார்கள் இருக்கிறது.
ஆனால், ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என சினிமாவில் பாட்டு பாடி நடிப்பார் சிம்பு. தொழிலில் அவரிம் ஒரு சின்சியாரிட்டி இல்லை என்பதுதான் பலரின் குற்றச்சாட்டும். மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சிம்பு அந்த இடத்தை தக்க வைக்க நினைக்கவே இல்லை. அதற்காக உழைக்கவே இல்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: அஜித்தே சூட்டிங் போய்டாப்ல! உனக்கு என்ன தலைவா? கைவிடப்பட்டதா சிம்புவின் ப்ராஜக்ட்?
அதன்பின் அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. கடைசியாக அவர் கேமரா முன்பு நின்று 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.
சிம்பு கடந்த சில மாதங்களாகவே இந்தியாவிலேயே இல்லை. விதவிதமான கெட்டப்பில் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். அவர் பாங்காக்கில் இருக்கிறார்.. லண்டனில் இருக்கிறார் என மாறி மாறி செய்திகள் வெளியாகி வருகிறது. அவர் வயது ஒத்த நடிகர்கள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில், ஜாலியாக சிம்பு ஊரை சுற்றிக்கொண்டிருந்தால் அவரின் சினிமா வாழ்க்கை பாதிக்கும் என தயாரிப்பாளர் சொல்கிறார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஜாலியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கிறார் சிம்பு.
சீக்கிரம் ஷூட்டிங் போங்க சிம்பு!...
இதையும் படிங்க: இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?