வடிவேலு நடித்த முதல் படம் எது தெரியுமா?.. நடிகை ஆர்த்தி சொல்லும் புதுத்தகவல்..

by sankaran v |   ( Updated:2024-02-11 08:20:22  )
Vadivelu Aarthi
X

Vadivelu Aarthi

நகைச்சுவை நடிகை ஆர்த்தி பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட ஆகிய நிகழ்ச்சிகளில் வந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனுஷூடன் நடித்த படிக்காதவன் படத்தில் அருக்காணி கேரக்டரில் வந்து நம்மை எல்லாம் நகைச்சுவையில் குலுங்க வைத்து விடுவார்.

ஆர்த்தி குழந்தை நட்சத்திரமாக என் தங்கை கல்யாணி படத்தில் நடித்துள்ளார். அப்போது இவரின் தற்போதைய கணவரான கணேஷ்கரின் சகோதரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் தான் வைகைப்புயல் வடிவேலுவும் என்ட்ரி ஆனாராம். ஆனால் நாமெல்லாம் வடிவேலுவின் முதல் படம் என் ராசாவின் மனசிலே என்று தான் நினைத்திருப்போம். ஆனால் அது அல்ல.

வடிவேலுவின் சினிமா என்ட்ரி குறித்து நகைச்சுவை நடிகை ஆர்த்தி சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Vadivelu

Vadivelu

சிவாஜி சாரை தேவர்மகன் சூட்டிங்கில் வைத்து சந்தித்தாராம். 2 கட்டப்படப்பிடிப்புகளில் நடித்தாராம். ஆனால் அது சில காரணங்களால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாம். அப்போது அரையாண்டுத் தேர்வு சமயம். படப்பிடிப்பை என்னால் தொடர முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்கிறார்.

அந்தப் படப்பிடிப்பில் உண்மையிலேயே ஒரு சிங்கத்துடன் சேர்ந்து நடிப்பது போலவே இருக்கும். அவர் செட்டுலேயே நடிக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. பிரபு சாருடனும் நிறைய படங்களில் நடித்துள்ளேன் என்கிறார் ஆர்த்தி.

வடிவேலு சார் முதன் முதலில் நடித்ததே என் தங்கை கல்யாணி படத்தில் தான். அவர் நடித்தது அவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். அவர் முதன் முதலில் நடித்தது என் ராசாவின் மனசிலே, சின்னக்கவுண்டர் என்று சொல்கிறார்கள்.

அதெல்லாம் கிடையாது. என் தங்கை கல்யாணி தான் அவருக்கு முதல் படம். அப்போது புரொடக்சன் பணிகளுக்கு உதவி செய்ய வந்தாராம். அந்த படத்தில் சைக்கிளில் பெல் திருடுவது போன்ற ஒரு காட்சியில் வடிவேலு நடித்தார் என ஆர்த்தி கூறியிருக்கிறார்.

Next Story