மட்டமான கேவலமான ஒரு ஆளு வடிவேலு! போண்டாமணி செஞ்சதை கூட செய்யல.. பூகம்பமாய் வெடித்த நடிகை
Actor Vadivelu: நாகேஷுக்கு பிறகு நகைச்சுவைக்கு என அர்த்தம் கொடுத்தது என்றால் அது வடிவேலு. கவுண்டமணி செந்தில் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் நாகேஷை மாதிரி தனது உடல், முக பாவனைகளால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேலு.
ஒரு சாதாரண நடிகராக வந்து இன்று வைகைப்புயலாக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கியக்காரணம் அவரின் கடின உழைப்பு மற்றும் நடிப்பின் மீது அவர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பும் அக்கறையும்தான். வடிவேலுவை சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த நடிகர், கலைஞன் என்றுதான் பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: முத்து வாழ்க்கையில் என்னமோ பெரிசா நடந்து இருக்கும் போலயே!… அண்ணாமலையும் உடந்தையா?
அவர் மீது சமீபகாலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் வடிவேலுவின் ட்ரூப்பில் இருப்பவர்களே அவரை கடுமையாக சாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபகால படங்களில் வடிவேலு அவருடைய ட்ரூப் நடிகர்கள் இல்லாமல் தனியாகத்தான் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த நகைச்சுவை நடிகையான பிரேம பிரியா வடிவேலுவை ஒரு மட்டமான ஆள் என்றும் கேவலமான ஆளு என்றும் கூறியிருக்கிறார். அதுவும் மனிதத்தன்மை இல்லாத மிக மோசமான ஆள் என்றும் கூறியிருக்கிறார். வடிவேலுவின் அம்மா இறந்த சமயத்தில் போண்டாமணி உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தாராம்.
இதையும் படிங்க: கமலுக்கு வந்த திடீர் ஆசை!.. சகலகலா வல்லவன் படத்துக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..
ஆனாலும் வடிவேலுவின் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த போண்டாமணி போனாராம். ஆனால் வடிவேலு போண்டாமணி இறப்பிற்கு வரவில்லை. அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பிரேம பிரியா கூறினார். ‘என்னதான் கர்வம் பிடித்த ஆளாக இருக்கட்டும். நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதுக்காகவது போகனும்னு சொல்லுவாங்க. ஆனால் வடிவேலு மிக மிக மோசமாக இருக்கிறார்’ என்று தன் ஆதங்கத்தை கூறினார் பிரேம பிரியா.