இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள்ள… கில்லி ரி-ரிலீஸால் கடுப்பான அஜித் தரப்பு… தரமான பதிலடிக்கு ரெடி பண்ணுறாங்களே!

by Akhilan |   ( Updated:2024-04-22 09:46:54  )
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள்ள… கில்லி ரி-ரிலீஸால் கடுப்பான அஜித் தரப்பு… தரமான பதிலடிக்கு ரெடி பண்ணுறாங்களே!
X

Ghilli: தமிழ் சினிமா நிலைமை தற்போது ரொம்பவே கவலைக்கிடமாகி இருக்கும் நிலையில் தியேட்டர்காரர்கள் தங்களை மீட்டுக்கொள்ள முன்னெடுத்து இருக்கும் விஷயம் தான் ரிரிலீஸ்கள். அந்தவகையில் கில்லிக்கு எதிராக அஜித் டீம் ஒரு படத்தினை கையில் எடுத்து இருக்கிறது.

கடந்த வருடம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தது கோலிவுட். ஆனால் இந்த வருடம் நேரெதிராக ஜனவரியில் இருந்து தோல்வி முகம் தான். நான்கு மாதங்களை கடந்துவிட்ட நிலையிலும் வெற்றி படம் கோலிவுட்டுக்கு கிடைக்கவே இல்லை. ஆனால் மலையாளத்தில் தொடர்ச்சியாக வரும் எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் ரகம் தான்.

இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா

இதனால் தியேட்டர்கள் நஷ்டத்தினை சந்தித்து வருகிறது. இதை மீட்டுக்கொள்ள முதலில் தனுஷின் 3 படத்தினை ரிரிலீஸ் செய்தது. அது ஹிட்டடிக்க தொடர்ச்சியாக கோலிவுட்டின் ஹிட் படங்களை ரிரிலீஸுக்கு தியேட்டர்காரர்கள் களமிறக்கினர். வாரணம் ஆயிரம் தொடங்கி பல படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் விஜயின் நடிப்பில் அவர் கேரியரை மாற்றிய கில்லி படத்தினை தற்போது ரிரிலீஸ் செய்தனர். உலகளாவில் வெளியாகிய இப்படம் பெரிய அளவில் மீண்டும் சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்தது. முதல் நாளில் மட்டுமே கில்லி 4 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்யாணம்… இன்னொரு பக்கம் கர்ப்பம்… கடுப்பாகி போன பாக்கியலட்சுமி ரசிகர்கள்!..

விஜய் ரசிகர்கள் இதனால் சந்தோஷத்தில் இருக்கும் நிலையில், போட்டிக்கு நாங்க இல்லாமையா என்ற ரீதியில் அஜித் தரப்பு தற்போது களமிறங்கி இருக்கிறது. அஜித்தின் மாஸ்ஹிட் படமான மங்காத்தாவை வரும் மே1ந் தேதி ரிரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். அஜித்தின் பிறந்தநாள் என்பதால் நிச்சயமாக மீண்டும் சாதனை செய்யும் என்றே கூறப்படுகிறது. மங்காத்தாவிலும் திரிஷா தான் நாயகி என்பதால் அது அவரின் கேரியரை மேலும் தூக்கிவிடும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story