‘அடங்கொப்பன் தாமிரபரணில தலைமுழுக’ எத்தனை பேர் ரசிச்சிருக்கீங்க? எத வச்சு பேசுனார் தெரியுமா ஆனந்தராஜ்?
Actor Anandharaj: 90களில் தன்னுடைய முரட்டுத்தனமான பார்வையாலும் கர்ஜிக்கும் வசனத்தாலும் உடல் வலிமையாலும் அனைவரையும் புரட்டி எடுத்த வில்லன் என்றால் அது நடிகர் ஆனந்தராஜ்தான். ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்துக்கும் ஆனந்தராஜுக்கும் உள்ள காம்போதான் அனைவரையும் ஈர்த்தது. பார்த்தாலே பயப்பட தோன்றும் பார்வை. கிட்டத்தட்ட நம்பியாருக்கு அப்புறம் அப்படி ஒரு தோற்றத்தை கொண்டவராக ஆனந்தராஜ் இருந்தார். நடித்த அத்தனை படங்களிலுமே இவரின் தனித்தன்மை புலப்படும். ஒரு வேளை உண்மையிலேயே இவர் வில்லன்தானோ என்றளவுக்கு படங்களில் தன்னை காட்டியிருப்பார் […]
Actor Anandharaj: 90களில் தன்னுடைய முரட்டுத்தனமான பார்வையாலும் கர்ஜிக்கும் வசனத்தாலும் உடல் வலிமையாலும் அனைவரையும் புரட்டி எடுத்த வில்லன் என்றால் அது நடிகர் ஆனந்தராஜ்தான். ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்துக்கும் ஆனந்தராஜுக்கும் உள்ள காம்போதான் அனைவரையும் ஈர்த்தது.
பார்த்தாலே பயப்பட தோன்றும் பார்வை. கிட்டத்தட்ட நம்பியாருக்கு அப்புறம் அப்படி ஒரு தோற்றத்தை கொண்டவராக ஆனந்தராஜ் இருந்தார். நடித்த அத்தனை படங்களிலுமே இவரின் தனித்தன்மை புலப்படும். ஒரு வேளை உண்மையிலேயே இவர் வில்லன்தானோ என்றளவுக்கு படங்களில் தன்னை காட்டியிருப்பார் ஆனந்தராஜ்.
இதையும் படிங்க: விஜயோட செல்லப்பெயர் இதுதானா? இத்தன நாள் தெரியாம போச்சே – க்யூட்டா சொல்றாங்களே
எந்தளவுக்கு மக்களை பயப்பட வைத்தாரோ அதற்கு மேலாக அனைவரிடமும் மிகவும் அன்பாக பேச்க் கூடியவர் ஆனந்தராஜ். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஒரு அற்புத மனிதராகவும் காணப்படுகிறார். அரசியல் குறித்தும் தன் வாதத்தை சரியான முறையில் வெளிப்படுத்துபவர்.
தன்னால் முடிந்த வரை பிறருக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர் ஆனந்தராஜ். சமீபகாலமாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். ஆனாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததை விட காமெடி காட்சிகளில் அவரை ரசிக்க வைக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஷாருக்கான் செய்து கொடுத்த சத்தியம்!.. ஜவான் உருவானபோது இவ்வளவு நடந்துச்சா!..
எந்தவொரு சினிமா மேடை ஏறினாலும் அவரிடம் கேட்கும் ஒரே டையலாக் ‘அடங்கொப்பன் தாமிரபணில தலைமுழுக’ என்ற டையலாக்குதான். அந்த ஒரு டையலாக் இன்றுவரை மிகவும் பிரபலமாகியிருக்கின்றது. அந்த டையலாக் ஏழுமலை படத்தில் ஆனந்தராஜ் பேசியிருப்பார்.
ஆனால் அது ஸ்கிரிப்டிலேயே இல்லையாம். வசனம் பேசும் போது ஆனந்தராஜ் அவராகவே இந்த டையலாக்கை பேசியிருக்கிறார். உடனே அர்ஜூன் ‘என்ன சார் ஒளறீங்க? ஒன்னும் புரியலயே’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆனந்தராஜ் ‘ நீங்க வேணும்னா பாருங்க. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகும்’ என சொன்னாராம். அவர் சொன்னப்படியே இப்ப வரைக்கும் இந்த டையலாக்கை யாரும் மறக்க வில்லை.
இதையும் படிங்க: இப்ப உங்களுக்கு எல்லாமே தெரியுனுமா?!.. நிருபர்களிடம் எரிந்து விழுந்த மைக் மோகன்…