வெளிநாட்டிலேயே செட்டிலாகி விட்டாரா நயன்தாரா?.. மூக்குத்தி அம்மன் 2 படம் எப்போ தான் ஸ்டார்ட் ஆகும்?

நயன்தாரா தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.;

By :  SARANYA
Published On 2025-05-30 19:11 IST   |   Updated On 2025-05-30 19:11:00 IST

ஐசரி கணேஷ் தாயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் நயன்தாரா தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.


நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம், கிரிக்கெட் மைதானத்தை மையமாகக் கொண்டு ஏப்ரல் மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதை தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2, தனி ஒருவன் 2, டாக்ஸிக், மண்ணாங்கட்டி என பல படங்களில் நடித்து வருகிறார்.


மேலும், நிவின் பாலியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் டியர் ஸ்டுடண்ட்ஸ் படத்தில் நயன்தாரா ஆசிரியர் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் இயக்க உள்ளனர். பின்னர் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவினுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். அதையடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.


மேலும், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வரும் நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் கதைகளில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்து அப்படங்களை தவிர்த்து வருகிறார். மேலும், படு பிஸியாக பல படங்களில் கமிட்டாகியுள்ள நயன்தாரா தன் குடும்பத்துடன் வெகேஷனுக்கு சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.


சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து வெளிநாட்டிலேயே நயன்தாரா டூர் அடித்து வருகிறார். ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கூட அவர் பங்கேற்கவில்லை.

Tags:    

Similar News