ஒரே நாளில் ஊத்தி மூடிய Mrs & Mr.. வனிதா அழுது புரமொஷன் பண்ணதெல்லாம் வீணாப்போச்சே!...

By :  MURUGAN
Published On 2025-07-15 10:33 IST   |   Updated On 2025-07-15 10:33:00 IST

Mrs & Mr movie: கோலிவுட்டில் பல படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. திருமண விஷயத்தில் பெற்றோரை மீறி நடந்துகொண்டதால் விஜயகுமாரின் கோபத்திற்கு ஆளானர். இது தொடர்பாக பொது இடங்களில் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்ட வீடியோவும் அப்போது வெளியானது.

ஏற்கனவே 2 முறை திருமணம் செய்திருந்த வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். ஆனால், அதுவும் அவர் நினைத்தபடி அமையவில்லை. பீட்டரை வனிதா திருமணம் செய்தது சமூகவலைத்தளங்களில் அதிகம் நக்கலடிக்கப்பட்டது. ஒருபக்கம் பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வனிதா காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்தது. நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் வனிதாவுக்கு எதிராக பேச டிவிட்டரே களேபரமானது.

ஆனால், சில மாதங்களில் பீட்டர் பால் இறந்துவிட்டார். அதன்பின் வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மக்களிடம் அவருக்கு ஆதரவும் எழுந்தது. தற்போது ஜோவிகா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துவிட்டார். அவரின் அம்மா வனிதா கதை எழுதி இயக்கி அவரே கதாநாயகியாக நடிக்க Mrs & Mr படம் உருவானது. வனிதாவின் முன்னாள் காதலரும், நடன இயக்குனருமான ராபர்ட் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.


இந்த படத்திற்காக கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் புரமோஷன் செய்தார் வனிதா. ஜோவிகாவும், வனிதாவும் தொடர்ந்து ஊடகங்களை சந்தித்து பேசினார்கள். ‘மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறோம். வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழகமாக இருக்க வேண்டாம். எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார் வனிதா. ஒருபக்கம், இந்த படத்தில் தனது பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பிலும் வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ‘நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியது’ என அழுதுகொண்டே சொன்னார் வனிதா.

இந்நிலையில், இப்படியெல்லாம் வெளியான Mrs & Mr படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த படம் வெளியாகும் முன்பும் சரி, வெளியான பின்னரும் சரி.. இப்படத்தை பற்றி யாருமே பேசவில்லை. டிவிட்டரில் யாரும் இப்படத்தை பற்றி எழுதவில்லை. விமர்சகர்கள் கூட இப்படத்தை விமர்சித்து வீடியோ போடவில்லை. வனிதாவை கதாநாயகியாக பார்க்க யாருக்கும் விருப்பமும் இல்லை. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் சில லட்சங்களை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

Tags:    

Similar News