Gossip: அந்த மூன்றெழுத்து உச்ச நடிகரின் அடுத்த நம்பிக்கை இந்த டைரக்டரா? இவரையும் முடிச்சிவிட்ராதீங்கப்பா!
Gossip: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி உச்சத்துக்கு வந்திருக்கும் நடிகருக்கு சமீபகாலமாகவே நேரம் சரியில்லை. இதனால் தன்னுடைய ஃபேன் இயக்குனரை கைக்குள் கொண்டு வந்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் எல்லா ஸ்பெஷல் விஷயங்களையும் அறிமுகம் செய்து வைத்த அந்த மூன்றெழுத்து நடிகர் வேர்ல்ட் ஹீரோ என்ற அடையாளத்துடன் அழைக்கப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் எடுத்த எல்லா படங்களுமே பல்ப் வாங்கி அவருக்கே கோபத்தை கொடுத்தது.
அவ்வளவுதான் ஐயாவோட இடம் இங்க காலி என்று யோசிக்க வைத்தார். ஆனால், இவர் எல்லாருக்குமே டீச்சர் என்பதை அங்கு நிரூபித்தார். அந்த பெரிய முதலாளி ரியாலிட்டி ஷோவில் உள்ளே வந்தார். 2கே கிட்ஸ் கூட தன்னுடைய இருப்பை காட்டி அசர வைத்தார்.
அதே நேரத்தில் தன் சினிமா கேரியரையும் மெறுகேற்ற முடிவெடுத்தார். அதற்கு தன்னுடைய ஃபேன் இயக்குனரை உள்ளே அழைத்து வந்தார். அவர் இயக்கத்தில் அந்த ஹீரோ பெயரில் ஒரு படம் நடித்தார். அந்த லாக்டவுன் பிரச்னைக்கு பின்னர் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி ஹிட்டடித்தது.
டைரக்டர் கேரியர் ஒரு பக்கம் உச்சம் எடுக்க நடிகர் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தன்னுடைய பழைய படங்களில் ரீமேக் படங்களில் ஹிட் அடிக்கிறது என ஆசையில் அந்த நாட்டு படத்தின் அடுத்த பாகம் வந்து இதுவரை எந்த நடிகரையும் விமர்சிக்க முடியாத லெவலில் கொடுமையாக விமர்சித்தனர்.
அடுத்த தன்னுடைய ஹிட் கூட்டணி பெல் இயக்குனரை அழைத்து வந்து அவருடன் அந்த ஆங்கில படத்தில் நடிக்க அங்கும் ரசிகர்கள் இவருக்கு என்னதான் ஆச்சு என்ற லெவலில் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மூன்றெழுத்து நடிகர் மீண்டும் தன்னுடைய ஃபேன் இயக்குனர் மீது நம்பிக்கை வைத்துள்ளாராம்.
அந்த நடிகர் ஹிட் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம். அந்த உழைப்பு படத்தை டாப் ஸ்டாரை இயக்கி முடித்துவிட்டு வேறு பக்கம் போக கூடாது நேராக இங்க வரணும் என்ற கண்டிஷனை போட்டு வைத்துள்ளராம். மூன்றெழுத்து நடிகரும் இதனால் அடுத்த படத்தை இன்னும் ஒப்புக்கொள்ளாமல் இந்த இயக்குனருக்கு காத்து இருக்கிறாராம்.