Coolie: லியோ மாதிரி ஆயிடும்!. எதுவுமே வேணாம் சார்!.. கலாநிதிமாறனிடம் கதறிய லோகேஷ்!...
Coolie: ஒரு படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருப்பது நல்லதுதான். ஏனெனில், எதிர்பார்ப்பு இருந்தால்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால், எதிர்பார்ப்பே அதிக அளவில் இருந்தால் அதுவே படத்திற்கு வில்லனாகவும் மாறிவிடும். ஏனெனில், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அது படத்தில் இல்லை எனில் அது படத்தின் வெற்றியை பாதிக்கும்.
ஒருபக்கம் எதிர்பார்ப்பே இல்லாமல் பல படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிப்படமாக மாறியிருக்கிறது. குட் நைட், குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். பொதுவாக சின்ன படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் என்றால் அதிக ஹைப் ஏற்படும்.
இதை தவிர்க்கவே முடியாது. ஒருபக்கம் வசூலை அள்ளுவதற்காக தயாரிப்பாளர் தரப்பும் அதிக அளவில் புரமோஷன் செய்து ஹைப்பை ஏற்றிவிடுவார்கள். இது முதல் நாள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க உதவுமே தவிர படம் நன்றாக இருந்தால் மட்டுமே எல்லோருக்கும் பிடித்து வெற்றிப்படமாக அமையும்.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து லியோ உருவானபோது இப்படத்திற்கு அதிக ஹைப் உண்டானது. டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இப்படம் பற்றி பலரும் பேசினார்கள். எந்த யுடியூப் சேனலுக்கு போனாலும் லியோ பற்றியே பேசினார்கள். ஆனால், லோகேஷ் எந்த பில்டப்பும் செய்யவில்லை. ஆனால், ‘என்னடா இவ்வளவு ஹைப்?’ என அவர் ஜெர்க் ஆனது உண்மை.
படம் வெளியான போது படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு திருப்தியாக இல்லை. நரபலி என்கிற கான்செப்ட் பலருக்கும் பிடிக்கவில்லை. எனவே, படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. ரிலீஸ் தேதியை சொல்லிவிட்டு ஷூட்டிங் போனதால் பிரஸ்ஸர் காரணமாக அப்படி நடந்துவிட்டது என லோகேஷ் சாரி கேட்க வேண்டியதாயிற்று.
தற்போது ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கியுள்ள கூலி படத்தின் மீது ஓவர் ஹைப் இருக்கிறது. இதனால் பதறிய லோகேஷ் கலாநிதி மாறனிடம் ‘லியோ மாதிரி ஆயிடும் சார்.. படத்திற்கு டீசர், டிரெய்லர் என எதுவும் வேண்டாம். நேராக படத்தை ரிலீஸ் செய்யுங்கள்’ என சொல்லியிருக்கிறார். ஆனால், புரமோஷன் செய்தே படத்தை ஓடவைக்கும் கலாநிதி மாறன் அதை ஏற்கவில்லை. டிரெய்லர் வெளியிட்டே ஆக வேண்டும் என சொல்ல ஆகஸ்டு 2ம் தேதி ஆடியோ லான்ச்சோடு டிரெய்லர் வீடியோவும் வெளியாகவுள்ளது.