நித்திலன் பெயர் அடிபடுவது எதனால்?!. ரஜினியை சந்தித்தபோது என்ன நடந்தது?.. பரபர அப்டேட்!...
Rajinikanth: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஹைப்பை ஏற்றும் நடிகர்களில் ரஜினி முக்கியமானவர். இவர் எந்த படத்தில் நடிக்கிறார்? அடுத்து யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எப்போதும் ரசிகர்களிடம் இருக்கும். அந்த ஹைப்பை எப்போதும் ரஜினி தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் அவரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ரஜினி எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துமுடித்துவிட்டு இப்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கூலி படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஆகஸ்டு 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
அதோடு, ஆகஸ்டு 2ம் தேதி படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகவுள்ளது. இந்த படம் பற்றி பெரிய ஹைப்பை லோகேஷ் செய்யவில்லை. ஆனால், டிவிட்டரில் இப்படம் பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதிலும், லோகேஷும் இப்படம் பற்றி ஊடகங்களில் பேசி வருகிறார். ஒருபக்கம் நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோர் எங்கு போனாலும் கூலி படம் பற்றி கேட்க அவர்களும் ஏதையாவது சொல்லிவிடுகிறார்கள்.
இந்நிலையில்தான் ரஜினியின் அடுத்த படத்தை மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்குகிறார் என்கிற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை பற்றி பேசாமால் அடுத்து படத்திற்கு போய்விட்டார்கள். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என பார்ப்போம்.
மகாராஜா படத்திற்கு பின் விஜய் சேதுபதிக்கு நித்திலன் ஒரு கதை சொன்னார். அது பிடித்துப்போக ‘டெவலப் செய்யுங்கள்’ என விஜய் சேதுபதி கூறினார். ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரிடம் பேசும்போது ‘எனக்கு எதாவது கதை இருக்கா?’ என கேட்பார். நித்திலனிடமும் அதையே கேட்க விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினியின் வயதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார். ரஜினிக்கும் அது பிடித்து போயிருக்கிறது. ஆனால், அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
ஆனால், நித்திலன் படத்தில் ரஜினி நடிக்கிறார். அதை ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என கொளுத்தி போட்டுவிட்டார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் ரெட் ஜெயண்ட் படத்தில் ரஜினி நடிக்கவே வாய்ப்பில்லை. அப்படி நடித்தால் ரஜினி தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல திமுக பயன்படுத்திக்கொள்ளும் என்பது அவருக்கு தெரியும். எனவே, இந்த செய்தியில் உண்மையில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.