‘தக் லைஃப்’ படத்துக்கு பிறகு காணாமல் போன கமல்!.. செம ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்காரே!...

By :  ROHINI
Published On 2025-06-23 17:14 IST   |   Updated On 2025-06-23 17:29:00 IST

kamal

கமல் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைப் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்த திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்டது.

மணிரத்னம் - கமல் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அனைவரும் "நாயகன்" படத்தை போன்று ஒரு அற்புதமான படமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். அதிகம் பேர் இது “நாயகன் 2” ஆக இருக்கலாம் என்றும், இல்லை என்றால் குறைந்தது ஒரு பெரிய கேங்ஸ்டர் திரைப்படம் என்றாலும் பரவாயில்லை என்றும் எண்ணினார்கள். மணிரத்னமும், கமலும் சேரும் போது படம்  வேறலெவலில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு, மக்களின் எதிர்பார்ப்புகளை அது ஏமாற்றியது. படத்தில் சரியான கதை இல்லாமை, திரைக்கதை பற்றாக்குறை போன்றவை குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. திரிஷாவுக்கு தனி முக்கியத்துவமே இல்லாமல், கமல் - சிம்பு இடையே சண்டைக்கே அவரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இவை அனைத்தும் மீம்ஸ் மெட்டீரியலாக மாறின.


இத்தனை விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்க, தக்லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சும் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் கர்நாடகாவில் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது; அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. பல பிரச்சனைகள் நடந்தபோதிலும், திரைப்படம் எதிர்பார்த்த வருவாயை பெற முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது கமல் குறித்து எதுவும் தகவல் இல்லாத நிலை காணப்படுகிறது. கோலிவுட்டில் விசாரித்த போது, அவர் தற்போது ஊரிலேயே இல்லையாம்; அமெரிக்கா சென்றிருக்கிறாராம். “தக்லைப்” படத்திற்குப் பிறகு, அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். அவர் ஜூலை மாதம் திரும்ப வருகிறார் என்றும், ஆகஸ்ட் மாதம் அந்த புதிய படம் தொடங்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும், தற்போது அவர் எம்பியாக (மாநில சபை உறுப்பினராக) பதவியேற்றுள்ளார். பாராளுமன்றத்தில் பதவியேற்பு, பிரமாண விழா, மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் என அவர் தற்போது அதில் பிசியாக இருப்பார். இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அவர் அடுத்த படத்தில் இணைவார் என தகவல்கள் கூறுகின்றன. இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் பேசும்போது, “எம்பி ஆகும் கனவு அவருக்குப் பெரியதாக இருக்கலாம், ஆனால் போன பிறகு தான் புரியும். இதுக்குத்தான் ஆசைப்பட்டோமா பாலகுமாரா!” என்ற கிண்டலாக பேசுகின்றனர்.

Tags:    

Similar News