அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே!.. தொட்ரா பாக்கலாம்!.. கூலி பவர்ஹவுஸ் பாட்டு ரிலீஸ்!...
Coolie PowerHouse: லோகேஷும், ரஜினியும் முதன் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் கூலி. லியோவுக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் இது. ஜெயிலர் படத்தில் பல நடிகர்களையும் கேமியோ வேடத்தில் நடிக்க வைத்து 650 கோடி அள்ளியது போல கூலி படத்திலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் போன்ற நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அதோடு, ஹிந்தியிலிருந்து அமீர்கானையும் அழைத்து வந்து ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதுபோக சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். துறைமுகத்தில் நடக்கும் தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற சிக்கடு மற்றும் மோனிகா ஆகிய 2 பாடல்களை ஏற்கனவே வெளியிட்டார்கள். அதில், மோனிகா பாடல் யுடியூப்பில் டிரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு காரணம் பல பெண்கள் இப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், கூலி படத்தின் மூன்றாவது பாடலாக பவர்ஹவுஸ் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. Breaking Bad படத்தில் வரும் Say My Name பாடலை ரெப்ரன்ஸாக வைத்து இப்பாடலை அனிருத் உருவாக்கியிருக்கிறார். வில்லன்களை காலி செய்ய ரஜினி கிளம்பும்போது இந்த பாடல் வரும் என கணிக்கப்படுகிறது.