அடுத்த பட வேலையை வேகமாக துவங்கிய கமல்!.. பக்கா ஆக்சன் ட்ரீட் கொடுக்க போறாராம்!..

By :  MURUGAN
Published On 2025-06-13 19:07 IST   |   Updated On 2025-06-13 19:07:00 IST

Kamalhaasan: கமல் மிகவும் ஆர்வமாக நடித்து வெளியான தக் லைப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நாயகன் படத்திற்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால், படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

கமல் மணிரத்னத்திடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அதை அப்படியே எடுக்காமல் அதிலிருந்து ஒரு லைனை பிடித்து வேறொரு கதையை உருவாக்கி மணிரத்னம் ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார். அப்படி உருவான படம்தான் தக் லைப். பேசாமல் கமல் சொன்ன கதையை இயக்கியிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என சிலர் சொல்கிறார்கள்.

தக் லைப் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இப்படம் 42 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதை புரிந்துகொண்ட கமல் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் என்பதை மாற்றி 4 வாரத்திலேயே போட்டு கொள்ளுங்கள் என நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் சொல்லிவிட்டாராம்.


தக் லைப் படம் துவங்குவதற்கு முன்பே சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால், தக் லைப் படம் எதிரபார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால் அன்பு - அறிவு படம் டிராப் என சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதை, திரைக்கதை தொடர்பாக கமலிடமும், சில கதாசியர்களுடனும் அன்பு - அறிவு இருவரும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கணிக்கப்பட்டுகிறது. அன்பு - அறிவு இரண்டு பேரும் சண்டை பயிற்சி இயக்குனர்கள் என்பதால் படம் பக்கா ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமையும் என்கிறார்கள்.

Tags:    

Similar News