நாலா பக்கமும் ஆஃபர் வந்தும் ஒன்னும் நடக்கலையே?!! கருப்புக்கு வந்த சோதனை..
எஸ்.ஆர்.பிரபு தயாரப்பில் ஆர்,ஜே,பாலாஜி இயக்கி சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. பல வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு பக்கா கமர்சியல் மசாலா திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் வக்கீலாகவும், வேட்டை கருப்பு சாமியாகவும் இரண்டு கெட்டப்புகளில் சூர்யா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. டீசரை பார்க்கும் போதே கண்டிப்பாக இப்படம் ஹிட்டு அடிக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வக்கீலாக இருக்கும் சூர்யா மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அவ்வப்போது வேட்டை கருப்பு சாமியாக மாறி தீயவர்களை அழிப்பது போல கதையை அமைத்திருக்கிறார்கள்,
இதைத்தொடர்ந்து இப்படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை பெற பலரும் போட்டி போடுகிறார்கள். ஆனால் படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததால் படத்தை வியாபாரம் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறாராம், இதே பிரச்சனையால்தான் படத்தின் ரிலீஸ் தேதியை கூட இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.
ஓடிடி உரிமை விரைவில் விற்கப்பட்டால் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.